169 தொகுதிகளில் அதிமுக போட்டி.. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் - முழு விவரம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் யாருக்கு எந்த தொகுதி என்பதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. சென்னையில் இன்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அப்போது நைனார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் உடனிருந்தனர். கட்சிகள் போட்டியிடும் விவரம்: பாஜக (27 தொகுதிகள்) மயிலாப்பூர் தளி முடக்குறிச்சி உதகமண்டலம் அவிநாசி திருப்பூர் தெற்கு கோவை வடக்கு கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை திருப்பத்தூர் மதுரை தெற்கு சாத்தூர் திருச்செந்தூர் வாசுதேவநல்லூர் ராதாபுரம் நாகர்கோவில் விளவங்கோடு ஆவடி திருவண்ணாமலை தஞ்சாவூர் திருவாரூர் அறந்தாங்கி மானாமதுரை ராமநாதபுரம் குளச்சல் பத்மநாபபுரம் ராசிபுரம் (தனி) பாமக (18 தொகுதிகள்) சேலம் மேற்கு தர்மபுரி பென்னாகரம...