Posts

Showing posts from December, 2020

சென்னை சாலையில் திடீர் பள்ளம்: பரபரப்பு

Image
ஆலந்தூர் பகுதியில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு சென்னை நங்கநல்லூர் பிரதான சாலையில் கழிவுநீர் குழாயில்  உடைப்பு ஏற்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் கழிவு நீர் உடைப்பு ஏற்ப்படு இருந்த சாலையில் தற்போது திடீரென 10 அடி அகலத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதைக்கண்டு அப்பகுதி மக்களும்,வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து ஆலந்தூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பள்ளத்தை பார்வையிட்டு வருகின்றனர். தற்போது அந்த சாலையில் அப்பகுதி மக்களே தடுப்புகள்,கற்க்கள் அமைத்து சாலை மூடியுள்ளனர்.இதனால் அவ்வழியாக செல்லகூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதி அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்ப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. [17:18, 09/12/2020] Ta Gudiyatham Vengatesh: கிராமங்களில் உள்ள பயனாளிகளை தேடிச்சென்று விசாரணை நடத்தி உடனடியாக பழங்குடியினர் மற்றும் இருளர் சான்றிதழ்களை வழங்கும் குடியாத்தம் கோட்டாட்சியர்.    ...

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது -ரஜினிகாந்த்

Image
ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாகவும் டிசம்பர் 31 ல் அதற்கான தேதி அறிவிப்பதாகவும்   ரஜினிகாந்த் அறிவித்தார். அதனை  தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.    இதற்கிடையே சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.  அவர் பேசுகையில் :- 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக கடந்த 2017 ம் ஆனது தெரிவித்திருந்தார். அதை நியாபகப்படுத்தி மக்களிடம் ஒரு எழுற்சி வரவேண்டும் என்று காத்திருந்தேன் அந்த நாள் வந்துவிட்டது  கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அதுமக்களின் தோல்வி. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும்.   இவ்வாறு தெரிவித்தார்