Posts

Showing posts with the label சிறப்பு கட்டுரைகள்

வீணாய் போன பிளாஸ்டிக் பாட்டில், ஆஸ்திரேலியாவுக்கு துணியாய் போன அதிசயம்!

Image
திருப்பூரிலிருந்து ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியில் பணியாற்றுபவர்களுக்கு பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆடைகளை  தயாரித்து வழங்கும் பின்னலாடை என்.சி.ஜான் & சன்ஸ் நிறுவனம்.   வீடியோவை காண    திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள சிப்கோ தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் நிறுவனம் என்.சி.ஜான் & சன்ஸ். இந்நிறுவனம் மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தி ஆடைகளை கடந்த 7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது.     இதனை அறிந்த டென்னிஸ்  ஆஸ்திரேலியா அமைப்பு ஆஸ்திரேலிய ஓபன் தொழிலாளர்களுக்கு வடிவமைக்கும் பணியை என் நிறுவனத்திடம் கூறியது. இதனையடுத்து பழைய பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து நூலிழைகள் தாயாரித்து அதன் மூலமாக பின்னலாடை களை வடிவமைத்து மாதிரி வடிவமைப்புகளை அனுப்பியது.     சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ஆடைகளால் கவரப்பட்ட டென்னிஸ் ஆஸ்திரேலியா அமைப்பினர் முதல் கட்டமாக 25 ஆயிரம் ஆடைகளை உற்பத்தி செய்யும் ஆர்டரை கொடுத்துள்ளனர். தற்போது இந்த ஆடைகளை தயார் செய்து அனுப்பியுள்ளதாகவும் இதன் மூலமாக மேலும் பல ஆர்டர்கள் கிடைத...

சிவபெருமானின் கண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவி

Image
சிவபெருமானின் கண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவி     நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசி  கொள்வார்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான மாணவியாக தமிழை கடவுளாகப் போற்றி வழிபடும் ஆன்மீகவாதியாகசிந்தனைவாதியாக திகழ்கிறார் மாணவி யசோதா நல்லாள் இவர் பெயரிலேயே என்ன தமிழ் வாசனை இதுவல்லவா நம் தமிழ் பெண்ணின் பெருமை. இந்த இளம் வயதிலேயே தமிழ் மொழியை அதன் தொன்மையை ஆராய்ந்து பல சாதனைகளையும் விருதுகளையும் பெற்ற சிறந்த தமிழ் அறிஞராகவும் திகழ்கிறார் மாணவி யசோதா நல்லாள். தமிழில் பால் பற்றுண்டு திகழும்  இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வடக்கு புதுப்பாளையம் இந்த  கொடுமுடி மண்ணில் தான் கே. பி. சுந்தராம்பாள் அவதரித்தார் தனது இனிமையான கம்பீரமான குரலில் செந்தமிழ் தமிழ் பாடல் பாடி ஒரு காலத்தில் அனைத்து தமிழர்களையும் தனது பாட்டால் கட்டிப்  போட்டார்.   அந்த வகையில் அதே மண்ணில் பிறந்த இவர் தனது பாட்டி ஊரான கருமண்டம் பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கக் கல்வி படித்து நாச்சிமுத்து புறத்தில் உள்ள சக்தி மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ முடித்தார். சிறு வயதிலேயே இவருக்கு தமிழ் ...

ஜல்லிக்கட்டில் புதைந்த காதலும் துரோகமும் நாணயமும் ரோசமும் நிறைந்த வீர வரலாறு

Image
மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக  அலங்காநல்லூர்,  பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் அந்த மாடு மாவீரன் அழகாத்தேவன் நினைவாகவே அவிழ்த்துவிடப்படுகிறது என்பது. யார் இந்த அழகாத்தேவன்? மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்ந்த செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன். ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார். நாகமலைக்கு அருகேயுள்ள கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்...

பொங்கலின் சிறப்புகள்

Image
கரும்பின் தத்துவ இனிப்பு! பொங்கலில் முக்கிய இடம் பெறுவது கரும்பு. இது இனிமையின் அடையாளம். கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது. அடிக்கரும்பு போல தித்திப்பாய் இனிக்கும். இதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால், தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், அதன் முடிவில் கரும்புபோல இனிமையைத் தந்திடும். கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுக்களும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தத்துவம். அதனாலேயே மகரசங்கராந்தியான பொங்கல் பண்டிகையில் கரும்பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து அழகுபடுத்துகிறோம். மஞ்சள் குலை வாங்குவது ஏன்? மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் ம...

உலக பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோவில்

Image
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உலக பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடா வருடம் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்ச்சக்கணக்கில் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில் மிகவும் பழைமை வாய்ந்த கோவில் ஆகும். 1942-ம் ஆண்டு வெளியிட்ட நூல் குறிப்பில் பாரியூர் முன்பு பாராபுரி என்று அழைக்கப் பட்டதாக உள்ளது. பாரியூரில் நான்கு திருக்கோவில்கள் உள்ளன. காணாபத்தியம் - கணபதி வழிபாடு  கௌமரம் - முருகன் வழிபாடு சௌரம் - சூரிய வழிபாடு சாக்கும் - சக்தி வழிபாடு சைவம் - சிவன் வழிபாடு வைணவம் - திருமால் வழிபாடு   ஆகிய ஆறு சமைய கடவுள்களுக்கும் ஆலயங்கள் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.  பாரியூர் கொண்டத்து காளியம்மன் வருடத்தில் மூன்று நாட்கள் மட்டும் ஆன் வேடத்தில் அருள்பாலிப்பார். நவராத்திரியில் வரும் சனிக்கிழமையில் திருப்பதி வெங்காச்சலபதி அலங்காரத்திலும் பண்டிகை நாட்களில் தேர் வெள்ளோட்...

நோய் இல்லாத வாழ்வை பெற நிலக்கடலை மருத்துவப்பயன்கள்

Image
நிலக்கடலையின்  நன்மைகள் : சாப்பிடும்அரைமணி நேரம் முன்னரும் சாப்பிட்டு அரைமணி நேரம் பிறகும் கடலைமிட்டாய் சாப்பிட்டால் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.   எது  சிறந்த ஸ்நாக்ஸ் தெரியுமா?. இன்று ஸ்னாக்ஸ் என்ற பெயரில் எதை எதையோ வாங்கி சாப்பிடுகிறோம்.  ஆனால் அது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை! அதுமட்டுமல்ல முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றில்தான் சத்து அதிகம் என்றும்  நினைக்கின்றோம். உண்மையில் உடலுக்கு அனைத்து நன்மைகளையும் அள்ளி தரும் நோய்  எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய எளிய விலை குறைவான ஸ்னாக்ஸ் ஒன்று உள்ளது.  அது நம்ம கடலைமிட்டாய் தான்.இதில் கடலையும் வெல்லமும் சேர்ந்து ஒரு  அருமையான சுவையான மற்றும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு அள்ளிக்  கொடுக்கிறது. பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும்  பொழுது கடலை கூறிய பித்த சேர்க்கையை சீர் செய்துவிடும். அதுமட்டுமல்ல  கடலையும் வெல்லமும் சேர்ந்து புரதம் இரும்பு செலினியம் மற்றும் பல  சத்துக்களை கொண்ட ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உருப்பெறுகிறது. பொதுவாக கடலை மிட்டாயில...