Posts

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு -CPM தொடர்ந்த வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை

Image
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு -CPM தொடர்ந்த வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஎம் தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணையின் " status report " சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் ஆகவே கூடுதல் அவகாசம் தேவை எனவும் அதில் தெரிவித்தனர். கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கில் CPM கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனனின் கோரிக்கையை ஏற்று வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும், இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில் அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப...

தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் - தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ்

Image
தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் - தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல். நடிகர் சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் நேற்று வெளியானதை முன்னிட்டு தூத்துக்குடி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் ஹெல்மட் இல்லாத 100 பேருக்கு இலவச ஹெல்மட் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தலைமை தாங்கி இரு சக்கர வாகனஓட்டிகளுக்கு இலவச ஹெல்மட்களை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவர் ஸ்மைலின் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் 70 ஆண்கள், 30 பெண்களுக்கு இலவச ஹெல்மட்கள் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் :- இது போன்ற விழிப்புணர்வு சேவைகளை மற்ற ரசிகர் மன்ற அமைப்புகளும் செய்ய முன்வர வேண்டும். நமது மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன் பதவியேற்ற பிறகு மாவட்ட காவல்துறையில் பொதுமக்களின் நலனுக்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 3 தெருக்களுக்கு 1 காவலர், என்ற திட்டம் மூலம் அந்த காவலர் 3 தெருக்களில் உள்ள முக...

இன்று உலக கடலோர தினம்

Image
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 3-வது சனிக்கிழமை, உலக கடலோர தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பது, கடற்கரையை அழிவின் பாதையில் இருந்து மீட்டெடுப்பது ஆகியவை இதன் நோக்கம். தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 1,024 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை உள்ளது. கடற்கரைதான் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம். இந்தியாவில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, தெலங் கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங் களில் சுமார் 8,400 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை உள்ளது. ரசாயன கழிவுகள் கடலில் கலப்பு, சாக்கடைகளை கடலில் கலப்பது, கழிவு நீர் மூலம் பிளாஸ்டிக் பைகள் கடலில் கலப்பது ஆகிய பொறுப்பற்ற செல்களால் கடற்கரைகள் குப்பை கிடங்குகளாக மாறி வருகின்றன, இதன் மூலம் கடல் நீர் பெருமளவில் மாசடைந்து வருகிறது. இதனால் மீன் மற்றும் கடல் உயிரினங்களுக்கும், மீன்பிடி தொழிலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு, மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். தொழிற்சாலைகள், அணுஉலைகள் போன்...

காதலிப்பதாக ஏமாற்றி காட்டுப் பகுதிக்கு அழைத்துஇளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி

Image
காதலிப்பதாக ஏமாற்றி காட்டுப் பகுதிக்கு அழைத்து இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் 17 வயது இளம்பெண்ணை காட்டுப் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக விளாத்திகுளம் வடக்குசெவலை சேர்ந்த ராமலிங்கம் (21) ,சுரேஷ் குமார் (19)., அழகுராஜா (19) , கன்னிராஜபுரத்தினை சேர்ந்த ராமச்சந்திரன் ( 22) , ஆகிய 4 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் . சூரன்குடி அருகே வடக்குசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (19) இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் உணவு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அங்கு வேலை பார்த்த விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண்னுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். இந்நிலையில் சுரேஷ்குமாருக்கும் அப்பெண்னுக்கும் தொடர்பு நீடித்துள்ளது. இதனிடையே நேற்று மாலை சுரேஷ்குமார் வேம்பார் கடற்கரைக்கு செல்வதாக கூறி அப்பெண்ணை பைக்கில் அழைத்து சென்ற...

வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை (JDGFT/ JointDirector General of Foreign Trade ) மூடுவதா?- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

Image
வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை (JDGFT/ Joint Director General of Foreign Trade ) மூடுவதா?- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்!   தமிழகத்தில் மதுரையில் இருக்கும் வெளிநாட்டு வர்த்தத்துக்கான மண்டல இயக்குனர் (JDGFT/ Joint Director General of Foreign Trade ) அலுவலகத்தை சென்னை மண்டல அலுவலகத்தோடு இணைப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு மக்களவை திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியிருக்கிறார். செப்டம்பர் 19 ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில், “வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல இயக்குனர் அலுவலகத்தை சென்னை மண்டல அலுவலகத்தோடு இணைக்க இருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கடிதம் தெரிவிக்கிறது. வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மண்டல இயக்குனர் அலுவலகம் மதுரையில் இருப்பதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருக்கும் ஏராளமான தொழில்முனைவோர்களின் தேவைகளை துல்லியமாக பூர்த்தி செய்து வந்தது. தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் தொழில் விவகாரங்களுக்காக சென்னை மண...

சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவ, மாணவியரின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Image
சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவ, மாணவியரின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில், 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.டி. திடலில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் தங்களது முகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களை எழுதி பிரச்சாரம் மேற்கொண்டனர். பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுகாதாரம் காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி சென்றனர். எஸ்.ஆர்.டி திடல், ரங்கசமுத்திரம், பேருந்து நிலையம், வடக்குப்பேட்டை, கடைவீதி வழியாக கோட்டுவீராம்பாளையத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது.

15வது நிதி கமிஷனில் புதுச்சேரி, டெல்லி மாநிலங்களை இணைக்க வலியுறுத்தப்பட்டது -புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 

Image
15வது நிதி கமிஷனில் புதுச்சேரி, டெல்லி மாநிலங்களை இணைக்க வலியுறுத்தப்பட்டது சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி;     கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் புதுச்சேரி மாநில பிரச்சனைகள் குறித்து பேசினேன். 15வது நிதி கமிஷனின் தலைவர் கலந்துக் கொண்டனர். 29 மாநிலங்களும் மத்திய நிதி கமிஷனில் சேர்க்கப்பட்டு உள்ளன. யூனியன் பிரதேசங்களுக்கு நிதி கமிஷன் உள்ளது. புதுச்சேரி, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய நிதி கமிஷன் இல்லை. மாநிலங்களுக்கு மத்திய அரசு வரி வருவாயில் 42 சதவீதம் பிரித்து கொடுக்கிறது. யூனியன் பிரதேசங்களுக்கு 90 சதவீத நிதியை பிரித்து கொடுக்கிறது. ஆனால் புதுச்சேரிக்கு 26 சதவீத நிதியை வழங்குகிறது. மத்திய அரசு வருமான வரி, சுங்க வரி தங்களுடைய கணக்கில் எடுத்து கொண்டு புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய 42 சதவீத வரியை கொடுக்க மறுக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும். 15வது நிதி கமிஷனில் புதுச்சேரியை இணைக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருந்தேன்.    புதிதாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை நிதி கமிஷனில் இணைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது...