Posts

நல்ல விஷயங்களை செய்து முன்மாதிரியாக திகழ வேண்டும் : திருப்பூரில் ஒன்றிணைந்த டிக் டாக் நண்பர்கள்

Image
டிக்டாக் செயலி மூலமாக ஒருங்கிணைந்த நண்பர்கள் திருப்பூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிரியாணி சமைத்து விருந்து விருந்து வைத்தனர். ஆதரவற்றோர் இல்லத்தை கட்டவும் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்தனர். டிக்டாக் செயலி மூலமாக பல்வேறு கலாச்சார சீரழிவுகள் நடைபெறுவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துவரும் நிலையில் அச்செயலியில் அன்பு பயணம் என்ற குழுவை உருவாக்கிய திருப்பூரைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் மைக்கேல், சிவா இளையராஜா, நந்தகுமார் என்ற நால்வரும் நலத்திட்ட உதவிகள் ஆர்வத்துடன் முயற்சி எடுத்தனர்.  இவர்களது இந்த முயற்சிக்கு டிக் டாக் செயலியில் இருந்த பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை இந்த அமைப்பினர் செய்து வந்தனர். அதன்படி இன்று திருப்பூர் மகாத்மா அன்பு இல்லத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு அமைப்பினர் ஒன்றாக இணைந்து பிரியாணி சமைத்து பரிமாறி மகிழ்ந்தனர். மேலும் இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் மேம்படுத்தி கட்டுவதற்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்தனர். இதில் கவின் என்ற சிறுவன் தான் உண்டியலில் சேமித்...

கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வேனில் சென்று ஒட்டு சேகரித்தார்.

Image
கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வேனில் சென்று ஒட்டு சேகரித்தார். வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.   ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அளுக்குளி ஊராட்சி், கோபி பாளையம், பள்ளத்தோட்ட காலணி, காசியூர், கொள்ளுமேட்டுகாலணி,பகுதிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அனுராதாB,SC,ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும்  p.இந்துமதி பாண்டுரங்கசாமி B.Com, மற்றும் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ,ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் D. மகாலட்சுமி ஆகியோருக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வேனில் சென்று ஒட்டு சேகரித்தார்.     இதில் ஆவின் தலைவர் காளியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.வெங்கடேஸ்வரன்,ஊராட்சி கழக செயலாளர் பாண்டுரங்கசாமி,  சொசைட்டி தலைவர்கள் கிருஷ்ணசாமி, குறிஞ்சிநாதன்,  நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், பெரியசாமி, மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர். ஒட்டு சேகரிப்பின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களிடம் கூறியதாவது. அடிப்படை வ...

முன்னாள் சிறைவாசிகளுக்கு நலதிட்ட உதவிகள் 

Image
முன்னாள் சிறைவாசிகளுக்கு நலதிட்ட உதவிகள் கூடுதல் மாவட்ட  நீதிபதி எஸ்.குணசேகரன் வழங்கினார்.   ஆப்காவின் பயிற்சி பெறும் சிறைஅலுவலர்கள் பயிற்சி பெற்றனர்.  தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்டகிளை சார்பில் நலதிட்ட உதவிகளை கூடுதல் மாவட்ட நீதிபதி (விரைவு நீதிமன்றம்)   எஸ்.குணசேகரன்  வழங்கினார்.  மற்றும் சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் சிறத்துறை அலுவலர்கள் வருகை தந்து சங்கத்தின் செயல்பாடுகளை அறிந்தனர் மேலும் முதலுதவி பயிற்சியும் பெற்றனர்.  இவ் விழா மாவட்ட அலுவலகத்தில்  21.12.2019 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க (TAMILNADU DISCHARGED PRISONERS AID SOCIETY-DPAS) அலுவலகத்தில் நடைபெற்றது.  நிகழ்விற்கு சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு தலைமை தாங்கினார்.  முன்னதாக செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்....

திருப்பூரில் சாலையோரம் முளைத்த கஞ்சா செடியால் பரபரப்பு

Image
திருப்பூரில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையில் சாலையோரம் முளைத்த கஞ்சா செடியால் பரபரப்பு.     திருப்பூர் காந்திநகர் திருமலை நகர் பகுதியில் சாலையோரம் முளைத்த கஞ்சா செடியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நகரமான திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக ஏராளமான வடமாநில இளைஞர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.     இவர்கள் குடியிருக்கும் பகுதிகளில்  கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இன் நிலையில் திருமலை நகர்  பகுதியில் சாலையோரம் முளைத்திருந்த இரண்டு கஞ்சா செடிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் குடியிருக்கும் நிலையில் அவர்கள் பயன்படுத்தும் கஞ்சா சிதறி சாலையோரம் கஞ்சா செடி முளைத்து இருக்கலாம் எனவும் இப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.        

உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பின் சார்பில் மகாத்மா கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Image
உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பின் சார்பில் மகாத்மா கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.      திருப்பூரில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சிலர் இணைந்து உதவிடத்தான் பிறந்தோம் என்ற அமைப்பினை துவங்கி அதன் மூலம் இயலாத பொதுமக்களுக்கு பல பொது சேவைகள் செய்து வருகின்றனர்.      அதுபோல் அமராவதிபாளையம் பகுதியில் உள்ள மகாத்மா கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு இவர்களே சமைத்து பரிமாறினார். வரவிருக்கும் கிருஸ்துமஸ் விழாவை ஒட்டி குழந்தைகளுடன் கேக் வெட்டி கிருத்துமஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகளை மகிழ்வித்தனர்.     மேலும் அவர்களு கூறுகையில் ரோட்டோர இயலாத மக்களுக்கு உணவளித்து வருகிறோம். அரசு பள்ளி சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்களை  இரண்டு பள்ளிகளில் வரைந்துள்ளோம். மேலும் மருத்துவம் கல்வி சம்பந்தமான உதவிகளும் செய்து வருகிறோம். இயலாதவர்களுக்கு தேவையான உதவிகளை  எங்களால் இயன்ற அளவு தொடர்ந்து செய்வோம் என்று தெரிவித்தனர். 

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி் பகுதிகளில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம்

Image
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம் செய்தார்.     ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டு புள்ளாம் ஊராட்சி், பூதிமடை புதூர்,அலிங்கியம், குரு மந்தூர் மேடு, ஆண்டவர் மலை பகுதிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் B.அனுராதாB,SC, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும்  S. முத்துக்குமார்,மற்றும் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ,ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் K.P. மெளதீஸ்வரன் ஆகியோருக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வேனில் சென்று ஒட்டு சேகரித்தார்.     இதில் ஆவின் தலைவர் காளியப்பன், முன்னாள் லக்கம்பட்டி சேர்மன் வேலுமணி, பேரூர் கழக செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வெங்கிடுசாமி, சோமசுந்தரம்,கார்த்தி, பிரபு  மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர் ஒட்டு சேகரிப்பின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களிடம் கூறியதாவது. அடிப்படை வசதிகளான  குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், சாலை வசதிக்கு ம...

தமிழ்ப் பண்பாட்டு மையம், சுப்ரீம் மொபைல்ஸ் , அரிமா சங்கம் இணைந்து நடத்திய தாள் மடிப்பு கலை (ஓரிகாமி) நிகழ்ச்சி

Image
தமிழ்ப் பண்பாட்டு மையம், சுப்ரீம் மொபைல்ஸ் , அரிமா சங்கம் இணைந்து நடத்திய தாள் மடிப்பு கலை (ஓரிகாமி) நிகழ்ச்சி நடைபெற்றது. ஓரிகாமி எனும் தலைப்பில் தாள் மடிப்பு கலை ஒரு நாள் பயிற்சி முகாம் குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். இப் பயிற்சி வகுப்பில்  4-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர்க்கு  தஞ்சையை சேர்ந்த பயிற்சியாளர் தியாக சேகர் கலந்து கொண்டு சிறப்புப் பயிற்சி வழங்கினார். நிகழ்வில் பயிற்சியாளர் குழந்தைகளுக்கு தொப்பி , நேரு தொப்பி , போலீஸ் தொப்பி என பல வகை தொப்பிகள் செய்ய சொல்லி கொடுத்தார். பின்னர் வன்னத்தாள்களில் பட்டாம்பூச்சி, சுற்றி சுழலும் ஹெலிகாப்டர், இறக்கை அசைக்கும் கொக்கு, மீன், படகு, கப்பல் போன்ற உருவங்களை செய்ய பயிற்றுவித்தார். இந்நிகழ்வு குறித்து பயிற்றுநர் தியாக சேகர் கூறும்போது  ஓரிகாமி பொழுது போக்கிற்கு மட்டுமல்லாமல் அறிவியல், கணிதத்தை வளர்க்கும் கலை ,மேலும் தாங்களே சில பொம்மைகளை உருவாக்குவதன் மூலம் மகிழ்வ...