Posts

தமிழகத்தில் 3,756 பேருக்கு கொரோனா...64 பேர் பலி

Image
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த வாரத்தில் இருந்ததை காட்டிலும் சற்றே குறைந்து இருக்கிறது. தற்போதைய எண்ணிக்கை 4000க்கு குறைந்த பாதிப்பு காணப்படுகிறது. இன்று தமிழகத்தில் 3,756 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும், 1,261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இன்று மட்டும் 34,962 பேருக்கு செய்த பரிசோதனையில் இந்த பாதிப்பு தெரியவந்துள்ளது.  இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை,1,700 ஆக உயர்ந்து உள்ளது. மதுரையில், 379 பேருக்கும், திருவள்ளூரில் 300 பேருக்கும், செங்கல்பட்டில் 273 பேருக்கும், என சென்னை அல்லாத மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,350 ஆக உள்ளது. இதில் இன்று மட்டும் 3,051 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.  இதுவரையில் 74,167 பேர் குணமாகி வீடுகளுக்கு சென்றுள்ளனர்.  46,480 பேர் மட்டும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

திருப்பூரில் இன்று 17 பேருக்கு கொரோனா...மாநகரப் பகுதியில் மட்டும் 13 பேருக்கு பாதிப்பு

Image
திருப்பூரில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. நேற்று 16 பேருக்கு தொற்று ஏற்ப்பட்ட நிலையில் மாவட்ட அளவில் 220 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், இன்று 6 பெண்கள் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் குன்னத்தூரில், பல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த 28 வயது பெண், ஆதியூர் 63 வயது ஆண், தட்டாங்குட்டையில் 30 வயது ஆணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் குண்டடத்தில், சக்திவிநாயகபுரத்தில் 67 வயது ஆண், அலகுமலையில் 58 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகரில், காலேஜ் ரோடு, திருவிக நகரில் 58 வயது பெண், கோவில் வழி புதுரோட்டில் 23 வயது பெண், சந்திராபுரத்தில் 25 வயது பெண், வெள்ளியங்காடு ஈஸ்வரமூர்த்தி நகரில் 55 வயது ஆண், சிவசுப்பிரமணியம் நகர் 29 வயது பெண், தம்பி தோட்டம், அருண்நகரில் 33 வயது ஆண், கே.செட்டிபாளையத்தில் 38 வயது ஆண், காலேஜ் ரோட்டில் 36 வயது ஆண், காங்கயம் ரோடு, சிடிசி பகுதியில் 28 வயது ஆண், ராக்கியாபாளையம் செந்தில் நகர் 31 வயது பெண், நல்லாத்துப்பாளையம் தங்கம் நகரில் 21 வயது ஆண்,...

தமிழகத்தில் குறைகிறது கொரோனா...இன்று 3,616 பேருக்கு தொற்று...உச்சநிலை முடிவுக்கு வந்ததா

Image
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொற்றுப்பரவலின் வேகம் குறைந்து உள்ளது. 1 ஆம் தேதி 3882 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. 2 ஆம் தேதி 4343 பேருக்கு தொற்று 3-ஆம் தேதி 4,329 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 4-ம் தேதி 4,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 5 ஆம் தேதி 4,150 பேருக்கு தொற்று உறுதியானது. 6-ம் தேதி 3,827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 3,616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னையில் வெகுவாக பாதிப்பு குறைந்ததே கொரோனா பரவல் வேகம் குறைந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சென்னை மாநகரில் மட்டும், 1-ம் தேதி 2,182 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. 2 ஆம் தேதி 2,027 பேருக்கு தொற்று 3-ஆம் தேதி 2,082 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 4-ம் தேதி 1,842  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 5 ஆம் தேதி 1,713 பேருக்கு தொற்று உறுதியானது. 6-ம் தேதி1,747  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று சென்னையில்  1,203 ப...

மின்னல் வேக கலெக்டர் யார்ன்னு தெரியுமா...போக்குவரத்து ஊழியரின் உருக்கமான பதிவு

Image
மதுரை தநாஅபோக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ்.சம்பத் என்பவரது பேஸ்புக் பதிவு இது..,    #மின்னல்_வேக_ஆட்சித்தலைவர் திருமிகு மருத்துவர் #கே_விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. எனது அப்பாவின் 4 வது (கடைசி) சகோதரர் திரு தே.ராமசாமி திருப்பூரில் வசித்து வருகிறார். அவரது மனைவி என் சித்தி திருமதி ஆர்.விஜயம், கோவை மாவட்டம் குளத்துப்புதூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் கடைசியாக தலைமையாசிரியையாக பணியாற்றி 31/12/2007ல் பணி ஓய்வு பெற்றார். அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. என் சித்தப்பாவிற்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக இரண்டு கண்களிலும் முழுமையாக பார்வையிழந்து விட்டார். சித்தியின் ஓய்வூதியத்தில் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 25/03/2020 அன்று முன்னதாக சிறிது நோய்வாய்ப் பட்டிருந்த சித்தி திடீரென இறந்து விட்டார். கொரோனா ஊரடங்கு அந்த நேரம் தொடங்கிவிட்டதால் குடும்பரீதியாக செய்ய வேண்டிய திதி போன்றவைகள் கூட 2 மாதங்கள் கழித்துதான் நடத்த முடிந்தது. அவரது வங்கிக் கணக்கில் மருத்துவச் செலவினங்கள் போக மீத மிருந்த சொற்ப தொகையை சித்தப்பா பெயருக்கு ம...

திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் துறைமுகத்திற்குள் வர தடை - கொரொனா காரணமாக மீன்பிடி தடையை அகற்ற கோரி, மீனவர்கள் போராட்டம்

Image
மீன்வளத்துறை சார்பில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் மறு உத்தரவு வரும் வரை மீன் பிடிக்க தடை என அறிவித்ததால் தூத்துக்குடி மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது , இதனையடுத்து மீன்பிடித்துறை முகத்தில் மீன்வளத்துறை சார்பில் இன்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது, அதில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் மறு உத்தரவு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரொனாவால் ஏற்கனவே வாழ்வாதாரமின்றி தவித்து வரும் இவ்வேளையில் மீன் பிடிக்க தடை அறிவிப்பால் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் துறைமுகத்தில் போராட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் தென்பாகம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும் டிஎஸ்பி கணேஷ் சம்பவம் இடத்தை பார்வையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தினார், இந்த பேச்சுவார்த்தையில் டிஎஸ்பி கணேஷ், மீன்வளத்த...

இலவச மின்சாரத்தைக் காக்க ரத்தக் கையெழுத்து  போடவும் தயார்: திருப்பூர் விவசாயிகள் ஆவேசம்

Image
தமிழகத்தில் வீரஞ்செறிந்த போராட்டத்தில் 63 விவசாயிகள் குண்டடி பட்டு உயிர்த் தியாகம் செய்து பெற்ற இலவச மின்சாரத்தைப் பறிக்க முயன்றால் விடமாட்டோம். இலவச மின்சாரத்தைக் காக்க விவசாயிகள் ரத்தக் கையெழுத்துப் போடவும் தயாராக இருக்கிறோம் என்று ஆவேசமாகத் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் கண்டியன்கோயில் மைதானத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்துப் பெறும் இயக்கம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்த இயக்கத்துக்கு கண்டியன்கோயில் ஊராட்சிமன்றத் தலைவரும், பிஏபி பாசன சபைத் தலைவருமான கோபால் தலைமை வகித்து கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ஒரு பைசா மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகத்தில் விவசாயிகள் போராடி உயிர்த் தியாகம் செய்தனர். விவசாயம் பொய்த்துப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இலவச மின்சாரம் இருப்பதுதான் ஓரளவு விவசாயிகள் தாக்குப்பிடிக்க உதவிக் கொண்டிருக்கிறது. இந்த இலவச மின்சாரத்தையும் பறிப்பதற்கு மத்திய மின்சார சட்டத் திருத்தம் 2020 கொண்டு வருவதை ஏற்க மாட்டோம். இப்போது கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். தேவ...

தூத்துக்குடி எஸ்.பி தலைமையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி!!

Image
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் இன்று காவல்துறையினருக்கு யோகா பயிற்சியும், உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது. *கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிக முக்கியமானதாகும். எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளில் யோகா பயிற்சியும் ஒன்றாகும். அதோடு மட்டுமல்லாமல் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியதாகும். ஆகவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு யோகா பயிற்சியளிக்க உத்தரவிட்டார்.* *அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 50 சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் வரவழைக்கப்பட்டு இன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. பின் அனைவருக்கும் கப சுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் சிப்காட் காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், வடபாகம் குற்றப்பரிவு க...