Posts

தூத்துக்குடி பிரஸ் கிளப் - புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு!

Image
தூத்துக்குடி பிரஸ் கிளப்பிற்க்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வானது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பெற்று அதன் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற்ற  பொதுக்குழு கூட்டத்தில், இந்த ஆண்டு நடைபெற உள்ள பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகளுக்கான தேர்வானது தேர்தலின்றி, உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து,  தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவராக காதர் மைதீன் (கலைஞர் தொலைக்காட்சி), செயலாளராக அண்ணாதுரை (குமுதம் ரிப்போர்ட்டர்), பொருளாளராக மாரிமுத்து ராஜா (மாலை முரசு நாளிதழ்), துணை தலைவராக லெட்சுமணன் (தூர்தர்ஷன் தொலைக்காட்சி), இணைச்செயலாளராக கார்த்திகேயன் (ஜூனியர் விகடன்) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து, பிரஸ் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், உறுப்பி...

தூத்துக்குடி : கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70ம் ஆண்டு பவள விழா.!-வருகிற 23ம் தேதி கொண்டாட்டம்.!

Image
தூத்துக்குடியில் வருகின்ற (23.09.2022) வெள்ளிக்கிழமை தனியார் ஹோட்டலில் வைத்து தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் சார்பில் 70ம் ஆண்டு பவள விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இது குறித்து தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்க நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் :-  தூத்துக்குடி உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில் நகரமாக இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி தாராளமயமாக்கல் அலையும் சேர்ந்து உலகின் பிற நாடுகளுடன் இந்தியாவில் வர்த்தகம் அதிகரிக்க வழி வகுத்தது இந்த வர்த்தகத்தின் பெரும் பகுதி கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது இதில் பெரும் பங்கை தூத்துக்குடி துறைமுகம் எடுத்துக் கொள்கிறது. தூத்துக்குடி துறைமுகம் 1868 ஆம் ஆண்டு ஒரு சிறிய நங்கூரம் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்த துறைமுகம் ஆழமற்ற சிறுது துறைமுகமாக உருவாக்கப்பட்டது. பாரம்பரியமாக சிறிய துறைமுகம் ஒரு பொது சரக்கு துறைமுகமாக வடிவமைக்கப்பட்டது. மற்றும் இலகுரக செயல்பாடுகளுடன் செயல்படுகிறது.  இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் கப்பல் வர்த்தகத்திற்கான புகலிடமாக பல நூற்றாண்டுகளாக புகழ்பெற்று தூத்துக்கு...

கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - உடலை வாங்க மறுத்து மாணவியின் உறவினர்கள் போராட்டம்

Image
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பசுவந்தனை உள்ள சில்லாங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் ‌ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி என்ற மாணவி அதே பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.  இந்த மாணவி நேற்று இரவு பள்ளி கழிவறையில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  தகவல் அறிந்து வந்த பசுவந்தனை காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து மணியாச்சி ரூரல் டிஎஸ்பி லோகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும், பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவி வைத்தீஸ்வரி கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தனது ஊரில் சித்தி ஒருவர் இறந்த துக்க நிகழ்விற்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பியதாக கூறப்படுகிறது.அப்போது இருந்து யாரிடமும், சரிவர பேசமால் இருந்துள்ளார்.  மேலும் கடந்த சில தினங்களாக வைத்தீஸ்வரின் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக பள்...

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு 22-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Image
2022-23 ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) சேருவதற்க்கு இணையதள விண்ணப்பம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (20.09.2022), 2022-2023 ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ வரவேற்கப்படுகின்றன. இடங்கள் சேருவதற்கான இணையதன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இணையதள அறிவிப்பு வெளியிடப்படும் நாள்: 21.09.2022 இனையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 22.09.2022 இணையதள விண்ணப்பப் பதிவுற்கான கடைசி நாள்: 03.10.2022 இணையதள முகவரி :  1. www.tnhealth.tn.gov.in  2.www.tnmedical selection.org

பரவும் காய்ச்சல் - தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ராமதாஸ் கோரிக்கை!

Image
  பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் 8ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்ததைப் போல, தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் மாணவர்களுக்கு கல்வி அவசியம்; அவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது மேலும் அவசியம். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது எனவும் ராமதாஸ் ட்வீட்.

தமிழகம் :மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.!

Image
தமிழகத்தில் குழந்தைகள் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.  சமீப காலமாக தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் பன்றிக் காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதிக அளவிலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் பரவி வருகிறது.  புதுச்சேரியில் பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக 150 குழந்தைகள் உட்பட 192 பேர் சிகிச்சையில் உள்ளனர். காய்ச்சலில் எந்தவித வைரஸும் கண்டறியப்படாத நிலையில், அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு செப்.25ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.  புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சியிட...

தமிழக மக்களுக்கான எந்த ஒரு நல்ல திட்டங்களையும் திமுக அரசு கொண்டு வரவில்லை - ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன்.!

Image
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்  தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வால் எழை, எளிய மக்களை வாட்டிவதைக்கும் திமுக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து  ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்  தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் அதற்கு மாறாக மின்சார கட்டண உயர்வு சொத்து வரி , போக்குவரத்து கட்டண உயர்வு என அனைத்தையும் உயர்த்தி மக்களை  வாட்டி வதைத்து வருகிறது திமுக அரசு,  இன்று தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார் இந்த திட்டத்தை அறிவித்தவர்  எடப்பாடியார் இப்படி அதிமுக அரசு கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை இன்று ஸ்டிக்கர் ஒட்டி ஆ...