கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற ரூ.50 கட்டணமா? சமூக ஆர்வலர் புகாரால் திருப்பூரில் பரபரப்பு

திருப்பரில் உள்ள கூட்டுறவு வங்கியில் கலைஞர் மகளிர் உரிமத்தொகை பணம் ரூ.1000 ஐ வங்கி மூலம் நேர்டியாக வழங்காமல் தனியார் மையங்களுக்கு பெண்களை அனுப்பி ஒவ்வொருவரிடமும் ரூ.50 பறிப்பதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த மாதத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது மாதமாக இந்த மாதமும் பயனாளிகள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்த நிலையில், அதை எடுக்க வங்கி ஊழியர்கள் மறுத்ததுடன், தனியார் செல்போன் கடைகளுக்கு அனுப்பியதாகவும், அங்கு ஒவ்வொருவரிடமும் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றினை அனுப்பி உள்ளார். அதில், திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், பெண்களுக்கு வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்கவில்லை எனவும்...