Posts

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற ரூ.50 கட்டணமா? சமூக ஆர்வலர் புகாரால் திருப்பூரில் பரபரப்பு

Image
 திருப்பரில் உள்ள கூட்டுறவு வங்கியில் கலைஞர் மகளிர் உரிமத்தொகை பணம் ரூ.1000 ஐ  வங்கி மூலம் நேர்டியாக வழங்காமல் தனியார் மையங்களுக்கு பெண்களை அனுப்பி ஒவ்வொருவரிடமும் ரூ.50 பறிப்பதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த மாதத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது மாதமாக இந்த மாதமும் பயனாளிகள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்த நிலையில்,  அதை எடுக்க வங்கி ஊழியர்கள் மறுத்ததுடன், தனியார் செல்போன் கடைகளுக்கு அனுப்பியதாகவும், அங்கு ஒவ்வொருவரிடமும் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  இதுகுறித்து திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றினை அனுப்பி உள்ளார். அதில், திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், பெண்களுக்கு வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்கவில்லை எனவும்...

தூத்துக்குடி : ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் - கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.!

Image
 தூத்துக்குடி : ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் - கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.! தூத்துக்குடியில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார், நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.  கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், மாநகராட்சிக்குட்பட்ட கிரேட் காட்டன், அசோக் நகர், புல்தோட்டம் மற்றும் சுந்தரவேல்புரம் ஆகிய இடங்களில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பு விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட...

திருநெல்வேலி-தூத்துக்குடி வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் 7 ஆவது முறையாக மீண்டும் ஓட்டை.!! - தொடரும் சுங்க வசூல் முடிவுக்கு வருமா.!?

Image
 திருநெல்வேலி-தூத்துக்குடி வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் 7 ஆவது முறையாக மீண்டும் ஓட்டை.!! - தொடரும் சுங்க வசூல் முடிவுக்கு வருமா.!? கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம்ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்த நான்குவழிச் சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கேரளா மற்றும் நெல்லை, குமரி, தென்காசி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் இறக்குமதி சாமான்கள், காற்றாலை உபகரணங்கள், மரத்தடிகள், ஏற்றுமதி செய்யப்படும் சரக்கு பெட்டக வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இவ்வழியே சென்று வருகிறது. இந்த பாலம் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. பாலம் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலத்தின் ஒரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) நடுவே பெரிய ஓட...

குலசை தசரா திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி அறிவிப்பு.!

Image
 குலசை தசரா திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி அறிவிப்பு.! குலசை தசரா திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் அருள்தரும் திருக்கோயிலின் 2023 தசரா திருவிழா நடைபெற்றது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டினம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா 15.10.2023 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் 24.10.2023 அன்று நடைபெற்றது. 25.10.2023 அன்று கொடியிறக்க நிகழ்ச்சிக்குப் பின் காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்து...

சூடான உணவுகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தந்தால் அபராதம் - தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை.!

Image
 சூடான உணவுகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தந்தால் அபராதம் - தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை.! சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தரக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் மாரியப்பன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், உணவு பாதுகாப்பு சட்டம் 2006 ன் படியும் உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2011-ன் படியும் நுகர்வோரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு உணவகங்களில் இனி சூடான உணவுப் பொருட்களான டீ, காபி, பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட இதர குழம்பு வகைகளையும் கூட்டு பொறியல் போன்ற சூடான உணவுகளை, பிளாஸ்டிக் பைகளில் கட்டி தரக்கூடாது என  உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவையும் மீறி மேற்கண்ட உணவு வகைகளை பிளாஸ்டிக் பைகளில் கொடுத்தால், சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள், உணவகங்கள் மீது முதல் தடவை 2000 ரூபாய், இரண்டாம் தடவை 5000 ரூபாய், மூன்றாம் முறை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட கடையின் இயக்கத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படு...

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஓராண்டுக்கு வீசிய குண்டுகளை, காசா மீது ஒரே வாரத்தில் வீசிய இஸ்ரேல்.! - இஸ்ரேல் போரை நிறுத்த ஐநா பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

Image
 ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஓராண்டுக்கு வீசிய குண்டுகளை, காசா மீது ஒரே வாரத்தில் வீசிய இஸ்ரேல்.! - இஸ்ரேல் போரை நிறுத்த ஐநா பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!  நியூயார்க்: காசா மீது இஸ்ரேல் 22வது நாளாக இன்றும் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் ஐநாவில் நிறைவேறியுள்ளது. கடந்த 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை கொண்டு பயங்கர தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து  இஸ்ரேல் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி காசாவில் உள்ள  2,913 குழந்தைகள் உட்பட 7,028 பேரை இரக்கமின்றி கொன்று குவித்துள்ளது.  18,484 பேர் படுகாயமடைந்துள்ளனர். எந்த அளவுக்கு தீவிரம் எனில், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஓராண்டுக்கு வீசிய குண்டுகளை, இஸ்ரேல், காசா மீது ஒரே வாரத்தில் வீசிவிட்டது. மறுபுறம் காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் அனைத்து இணைப்புகளையும் இஸ்ரே...

காஸா மீது தரைப்படை தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Image
 காஸா மீது தரைப்படை தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! தரைப்படைகள் இரவோடுஇரவாக காஸாவிற்குள் நுழைந்து ஹமாசுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகரி அதிகாரப்பூர்வ தகவல்.காஸா நகரமக்களை தெற்கு காஸா பகுதிக்கு செல்லவும் அறிவுறுத்தல். கடந்த சில வாரங்களாகவே, "ஹமாஸை ஒழித்துக் கட்டுவதே எங்கள் நோக்கம். அதற்காக, காஸாவுக்குள் தனது படைகள் நுழையும்" என இஸ்ரேல் கூறி வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, இதனை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் டேனியல்கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன், இந்திய நேரப்படி சுமார் 10.30 மணியளவில், தெற்கு இஸ்ரேலில் இருந்த பிபிசியின் குழுவினர் காஸாவில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாக கூறினர். அவர்கள் காஸாவிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருந்துள்ளனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தான் செய்ததாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காஸாவில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆன...