Posts

மயிலாடுதுறையில் 50 நடன கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு!

Image
 மயிலாடுதுறையில் 50 நடன கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்!  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்று ஊடக மைய அனைத்து கலைகளின் கூட்டமைப்பு இசை நாடக நடனக் கலைஞர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு,  மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட  சங்கம்  மற்றும் பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு   வெல்லம், அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், மற்றும் 2025ம் ஆண்டிற்கான நாள்காட்டி அடங்கிய பொங்கல் பரிசுப் பை வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்று ஊடகம் மையத்தின்  மாவட்ட தலைவர் திருமாவளவன்  முன்னிலையில், மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட சங்கம் மற்றும்  பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை சார்பில்  நிர்வாகி வள்ளாலகரம் ஆர்.ஆர். பாபு தலைமையில்,  அறக்கட்டளை ஆலோசகர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், சிறப்புரையாற்றினார். ஜி எம். அறக்கட்டளை நிர்வாகி முனைவர். ஜி எம். பத்மா பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர்எம்எஸ்.நாராயணன்,  சிவகுமார், முகமது இக்பால், வீரா ஆகியோர்  கலந்து கொண்டு பொங்கல...

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள்... குப்பை பிரிக்க தனி மறைவிடம் ஏற்படுத்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

Image
மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள்,  நூற்றுக்கணக்கான உள் நோயாளிகள்  பல்வேறு நோய்களுக்கு மருத்துவம் மேற்கொண்டு வருகிறார்கள். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வரும் மயிலாடுதுறை தலைமை மருத்துவமனை மாவட்டத்தில் உள்ள  500 கிராம மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. அடிப்படை கட்டமைப்பு மற்றும் பல்வேறு வசதிகள் தமிழ்நாடு அரசினால் மேம்படுத்தப்பட்டுள்ளதால்,  குறிப்பாக தாய்மார்களுக்கான தாய்மை, குழந்தை பேரு முன்பின் மருத்துவங்கள், எலும்பு முறிவு, விபத்துக்கள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவர்களால் சிறப்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மிக அதிக அளவில் உள்ள மருத்துவ கழிவுகள் உருவாகின்றன.  மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு தனியான நிறுவனம்  செயல்பட்டு அதனை சேகரித்து பிரித்து அகற்றி வருகிறார்கள். மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை பிரித்து அகற்றும் பணி  தற்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் கட்டிடம் அமைந்துள்ள வளாகத்தில் திறந்த நிலையில் நடைபெறுகிறது.இறந்த...

மயக்கமடைந்த பெண்ணை மீட்க கதவை திறந்த போது பாய்ந்த கூட்டம்! திருப்பதியில் 6 பேர் பலியான சோகம்!

Image
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்கள் வாங்கச்சென்ற பக்தர்கள் 6 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  திருப்பதி கோவிலே உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தரிசனம் செய்யக்கூடிய நாட்டிலேயே முக்கியமான கோவிலாகும். திருமலை திருப்பதியில் நடக்கிற பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.  இந்த டோக்கன்கள் 10ந்தேதியான இன்று தான் வழங்கப்பட உள்ளன.  திருப்பதி விஷ்ணு நிவாசம் அருகே உள்ள பள்ளி வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு டோக்கன் வழங்க தயாராக இருந்த நிலையில்,  நேற்று முதலேஅங்கு கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்து உள்ளது.  நேற்று மாலை கூட்டம் அதிகமான நிலையில், நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயக்கமடைந்து உள்ளார். அவரை மீட்பதற்காக உடனடியாக கதவு திறக்கப்பட்டதும், அந்த கதவுக்குள் நுழைவதற்காக கூட்டம் ஒட்டுமொத்தமாக பாய்ந்தது தான் பெரு நெரிசலுக்கு காரணம். பக்த...

ஆளை மயக்கும் அகஸ்தியர் மலைக்காடு! மலை ஏற்றத்துக்கு நாளை முன்பதிவு தொடக்கம்!

Image
  மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கியமான மலையேற்றமாக கருதப்படுவது அகஸ்தியர் மலை மலையேற்றம் ஆகும். தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள களக்காடு முண்டன் துறை பகுதி முக்கிய புலிகள் சரணாலயமாக உருவாக்கப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டு வழியில் அகஸ்தியர் மலையேற்றம் தடை செய்யப்பட்டு உள்ளது. இப்போது கேரளத்தின் திருவனந்தபுரம் வழியாக மட்டுமே இந்த மலையேற்றம் செல்ல முடியும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புத மூலிகைகள், ஆளை மயக்கும் வனப்பகுதி, நிமிடத்துக்கு நிமிடம் மாறும் காலநிலை, இதையெல்லாம் தாண்டி மலை உச்சியில் இருக்கும் அகஸ்திய மாமுனியை காண ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்தியா முழுவதும் இருந்து மக்கள் படையெடுக்கிறார்கள்.  அகஸ்தியர்கூடம் சிகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நுழைவது கேரள வனத் துறையால் தடைசெய்யப்பட்டுள்ளது. வனத் துறையால் வழங்கப்படும் அனுமதியை பெற்று அவர்களுடைய வழிகாட்டுதலுடன் மட்டுமே இந்த மலையேற முடியும்.  அகஸ்தியர் மலையேற்றம் 3 நாள் கொண்ட கடினமான மலைஏற்றம் ஆகும். முதல் நாள் போனாக்காடு வன சோதனைச்சாவடியில் புறப்பட்டு, வனப்பகுதிக்குள் 16 கி.மீ தொலைவில் உள்ள அ...

திருப்பூரில் 3 டன் சர்க்கரை, ஒன்றரை டன் கடலை மாவில் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டு தயாரிப்பு

Image
திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியன்று பிரசாதமாக வழங்குவதற்காக 3 டன் சக்கரை, ஒன்றரை டன் கடலை மாவு, பயன்படுத்தி 600 தன்னார்வலர்களுடன் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 10ம் தேதி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி விழா உலகம் முழுவதிலும் உள்ள பெருமாள் கோவில்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருவார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கிட திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில்15வது வருடமாக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. லட்டு தயாரிக்கும் பணிக்காக சர்க்கரை 3 டன், கடலை மாவு 1½ டன், 150 டின் எண்ணெய், திராட்சை, முந்திரி, நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி பிரசாதமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் காமாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் நடந்து வரும் இப்பணிகளில், 600 பே...

திரைப்படமாகிறது வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு!

Image
லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அடுத்த வருடம் வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாகிறது இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக 'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.  டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர் அரவிந்தராஜ் இயக்க, வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா.  'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், 'தேசிய தலைவர்' திரைப்படத்தில் பகம்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ எம் பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.  'வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தின் மோஷன் பிக்சர் டீசர் வேலுநாச்சியாரின் பிறந்த நாளான ஜனவரி 3 அன்று வெளியிடப்பட்டது. இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனி...

தமிழ்நாட்டு ரயில் நிலையங்களை புறக்கணிக்கும் ரயில்கள்!...தென்னக ரயில்வே அதிகாரிகளின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டு மக்கள் வேதனை!!

Image
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மேற்கு மண்டல ரயில் பாதையில், ரயில் நிறுத்தங்கள் மற்றும் சீட் ஒதுக்கீட்டில் கேரளாவுக்கு அதிகமாக வழங்கி விட்டு, தமிழ்நாட்டு மக்களை தென்னக ரயில்வே வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் நான்கைந்து நிறுத்தங்கள் மட்டும் நிறுத்தப்படும் அதிவேக  எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூட, கேரளாவில் 16க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதாகவும் இதனால் தமிழக மக்கள் ரயில்களில் இடம் கிடைக்காமல் திண்டாடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.  கிழக்கு கடற்கரையான தமிழ்நாட்டில் இருக்கிற சென்னையில் இருந்து மேற்கு கடற்கரையில் உள்ள கேரள மாநிலத்தின் ஒவ்வொரு சிறிய ஊர்களுக்கும் தென்னக ரயில்வே திட்டமிட்டு ரயில்களை இயக்குகிறது. சென்னையிலிருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் ரயில்கள் அங்கிருந்து  சொரனூர், திரூர், கோழிக்கோடு வழியாக வடக்கு கேரளாவுக்கும், திரிச்சூர், எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் வரை தென்கேரளாவுக்கும் இயக்கப்படுகி ன்றன. தமிழ்நாட்டின் சென்னையில் இருந்தும், ஆந்திராவின் திருப்பதியில் இருந்தும், ...