Posts

சிவலிங்கம் வடிவில் விழுந்த தேங்காய்... பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பொதுமக்கள்!

Image
 பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தில் திடீரென தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த தேங்காய் சிவலிங்கம் வடிவில் இருந்ததால் வியந்துபார்த்து   பாலாபிஷேகம் செய்து பூஜைகள் செய்து வழிபட்ட பொதுமக்கள் தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தில் கீழத்தெருவில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. நேற்று இரவு சிவன் ராத்திரியை முன்னிட்டு இந்த கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிசயம் நடந்தது.  அந்த கோயில் வளாகத்தில் உள்ள  தென்னை மரத்திலிருந்து திடீரென ஒரு தேங்காய் கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த தேங்காயை பார்க்கும்போது அச்சு அசல் சிவலிங்கம் வடிவில் இருந்துள்ளது. உடனே அங்கிருந்த பக்தர்கள் சிவன்ராத்திரி அன்று இதுபோல் சிவபெருமான் நமக்கு காட்சியளிக்கிறார் என்று சிவலிங்கம் வடிவில் இருந்த தேங்காயை எடுத்து வைத்து சிவனாக நினைத்து வழிபடத் தொடங்கினர்.  இந்த செய்தி அருகில் உள்ள பொதுமக்களுக்கும் பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஒன்று திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சிவலிங்கம் வடிவிலான தேங்காய்க்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்ததுட...

தேசிய தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய திருப்பூர் வீராங்கனை ஸ்ரீவர்த்தினி!

Image
இந்திய தடகள க்  கூட்டமைப்பின் சார்பில் , 38 வது தேசிய அளவிலான  விளையாட்டு ப்போட்டிகள் ,  உத்தரகாண்ட் மாநிலம் ,  டேராடூன்-ராய்ப்பூரில் உள்ள மஹாராணா பிரதாப் சிங் ஸ்டேடியத்தில் ,  கடந்த பிப் ரவரி மாதம்    8 ம் தேதி முதல்  12 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் வீரர்கள் ,  வீராங்கனைகள் பலர் பங்கேற்றனர்.   நமது திருப்பூர் , ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப்  வீராங்கனை  S.K. ஸ்ரீவர்த்தனி , மகளிர்  பிரிவின் , 400 மீ தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று ,  வெள்ளிப்பதக்கம்   வென்று பெருமை சேர்த்துள்ளார். ஓட்ட தூரத்தை  59.86  நொடிகளில் ஓடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.  இந்த வெற்றியானது இந்திய தடகளக் கூட்டமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும், இந்திய அளவில் முதல் 16 தரவரிசையில் உள்ளவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப்போட்டிகளில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்றுப் பதக்கம் வெல்வது இது முதன்முறையாகும். இந்த விளையாட்டுப் போட்டி  இந்திய ஒலிம்பிக் போட்டிகள் ...

பேருந்து கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி... 21 பேர் படுகாயம்!

Image
திருப்பூரில் இருந்து இன்று காலை தனியார் பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தார்கள்.  இந்த நிலையில் இந்த பேருந்து கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி அடுத்த பள்ள கவுண்டம்பாளையம்  வரும்போது, ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்தது.  இதில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களான பெரியசாமி மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது தவிர 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  படுகாயம் அடைந்த அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.விபத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் கை, கால்களை இழந்துள்ளனர்.   இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான ப...

மயிலாடுதுறையில் 50 நடன கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு!

Image
 மயிலாடுதுறையில் 50 நடன கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்!  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்று ஊடக மைய அனைத்து கலைகளின் கூட்டமைப்பு இசை நாடக நடனக் கலைஞர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு,  மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட  சங்கம்  மற்றும் பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு   வெல்லம், அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், மற்றும் 2025ம் ஆண்டிற்கான நாள்காட்டி அடங்கிய பொங்கல் பரிசுப் பை வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்று ஊடகம் மையத்தின்  மாவட்ட தலைவர் திருமாவளவன்  முன்னிலையில், மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட சங்கம் மற்றும்  பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை சார்பில்  நிர்வாகி வள்ளாலகரம் ஆர்.ஆர். பாபு தலைமையில்,  அறக்கட்டளை ஆலோசகர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், சிறப்புரையாற்றினார். ஜி எம். அறக்கட்டளை நிர்வாகி முனைவர். ஜி எம். பத்மா பசுமை நேசக் கரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர்எம்எஸ்.நாராயணன்,  சிவகுமார், முகமது இக்பால், வீரா ஆகியோர்  கலந்து கொண்டு பொங்கல...

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள்... குப்பை பிரிக்க தனி மறைவிடம் ஏற்படுத்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

Image
மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள்,  நூற்றுக்கணக்கான உள் நோயாளிகள்  பல்வேறு நோய்களுக்கு மருத்துவம் மேற்கொண்டு வருகிறார்கள். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வரும் மயிலாடுதுறை தலைமை மருத்துவமனை மாவட்டத்தில் உள்ள  500 கிராம மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. அடிப்படை கட்டமைப்பு மற்றும் பல்வேறு வசதிகள் தமிழ்நாடு அரசினால் மேம்படுத்தப்பட்டுள்ளதால்,  குறிப்பாக தாய்மார்களுக்கான தாய்மை, குழந்தை பேரு முன்பின் மருத்துவங்கள், எலும்பு முறிவு, விபத்துக்கள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவர்களால் சிறப்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மிக அதிக அளவில் உள்ள மருத்துவ கழிவுகள் உருவாகின்றன.  மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு தனியான நிறுவனம்  செயல்பட்டு அதனை சேகரித்து பிரித்து அகற்றி வருகிறார்கள். மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை பிரித்து அகற்றும் பணி  தற்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் கட்டிடம் அமைந்துள்ள வளாகத்தில் திறந்த நிலையில் நடைபெறுகிறது.இறந்த...

மயக்கமடைந்த பெண்ணை மீட்க கதவை திறந்த போது பாய்ந்த கூட்டம்! திருப்பதியில் 6 பேர் பலியான சோகம்!

Image
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்கள் வாங்கச்சென்ற பக்தர்கள் 6 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  திருப்பதி கோவிலே உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தரிசனம் செய்யக்கூடிய நாட்டிலேயே முக்கியமான கோவிலாகும். திருமலை திருப்பதியில் நடக்கிற பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.  இந்த டோக்கன்கள் 10ந்தேதியான இன்று தான் வழங்கப்பட உள்ளன.  திருப்பதி விஷ்ணு நிவாசம் அருகே உள்ள பள்ளி வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு டோக்கன் வழங்க தயாராக இருந்த நிலையில்,  நேற்று முதலேஅங்கு கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்து உள்ளது.  நேற்று மாலை கூட்டம் அதிகமான நிலையில், நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயக்கமடைந்து உள்ளார். அவரை மீட்பதற்காக உடனடியாக கதவு திறக்கப்பட்டதும், அந்த கதவுக்குள் நுழைவதற்காக கூட்டம் ஒட்டுமொத்தமாக பாய்ந்தது தான் பெரு நெரிசலுக்கு காரணம். பக்த...

ஆளை மயக்கும் அகஸ்தியர் மலைக்காடு! மலை ஏற்றத்துக்கு நாளை முன்பதிவு தொடக்கம்!

Image
  மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கியமான மலையேற்றமாக கருதப்படுவது அகஸ்தியர் மலை மலையேற்றம் ஆகும். தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள களக்காடு முண்டன் துறை பகுதி முக்கிய புலிகள் சரணாலயமாக உருவாக்கப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டு வழியில் அகஸ்தியர் மலையேற்றம் தடை செய்யப்பட்டு உள்ளது. இப்போது கேரளத்தின் திருவனந்தபுரம் வழியாக மட்டுமே இந்த மலையேற்றம் செல்ல முடியும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புத மூலிகைகள், ஆளை மயக்கும் வனப்பகுதி, நிமிடத்துக்கு நிமிடம் மாறும் காலநிலை, இதையெல்லாம் தாண்டி மலை உச்சியில் இருக்கும் அகஸ்திய மாமுனியை காண ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்தியா முழுவதும் இருந்து மக்கள் படையெடுக்கிறார்கள்.  அகஸ்தியர்கூடம் சிகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நுழைவது கேரள வனத் துறையால் தடைசெய்யப்பட்டுள்ளது. வனத் துறையால் வழங்கப்படும் அனுமதியை பெற்று அவர்களுடைய வழிகாட்டுதலுடன் மட்டுமே இந்த மலையேற முடியும்.  அகஸ்தியர் மலையேற்றம் 3 நாள் கொண்ட கடினமான மலைஏற்றம் ஆகும். முதல் நாள் போனாக்காடு வன சோதனைச்சாவடியில் புறப்பட்டு, வனப்பகுதிக்குள் 16 கி.மீ தொலைவில் உள்ள அ...