சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என வதந்தியை பரப்புகிறார்கள் : அமைச்சர் வேலுமணி சொல்கிறார்

தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் விநியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குனர் ஹரிஹரன் மற்றும் அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். சென்னை உட்பட தமிழகத்தின் எந்த பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் மாதம் வரை தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாகக் கூறினார். பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்து வருவதாகக் கூறிய அமைச்சர் வேலுமணி, தற்போது நாள் ஒன்றுக்கு 9,100 முறையாக உள்ள குடிநீர் விநியோகம் பத்தாயிரம் முறையாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்