நெல்லை அருகே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

 


நெல்லை பிப் 20


களக்காடு காவல் நிலையத்தில் உள்ள வழக்கில் சிங்கிகுளம் பகுதியை சேர்ந்தவர்களான சுரேஷ்(22) , மற்றுமாெரு சுரேஷ் (18), பவித்ரன் (19), மணிகண்டன் (22) ,சுரேஷ் (20) ஆகியோர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா  கவனத்திற்கு வந்தது.


இதையடுத்து 5 பேரையும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா அறிவுறுத்தியதன் பேரில், அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின் பேரில், சுரேஷ், மற்றொரு சுரேஷ், பவித்ரன், மணிகண்டன், முத்துசுரேஷ், ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில்  அடைக்கப்பட்டனர்


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்