டிரைவரை கொல்ல நடந்த களேபரம்: அரிவாளால் வெட்டி, நாட்டு வெடிகுண்டு வீசி அழிச்சாட்டியம்

முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி நாட்டு வெடிகுண்டு வீடி ஓட்டுநரை கொல்ல முயற்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. 



சென்னை பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பிரதான சாலை, நேரு நகர் சந்திப்பில் நேற்றிரவு ஓட்டுநர் முத்து செல்வம்(35) என்பவரை ராஜேஷ் மற்றும் அவருடன் வந்த மூன்று பேர் முத்து செல்வத்தை வழிமறித்து சரமாறியாக வெட்டிவிட்டு முருகாவை எதிர்த்து நீ ஊர்ல வாழ முடியுமா எனக் கூறி தலையிலேயே பெட்டியுள்ளனர். பின்னர் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில் முத்து செல்வத்திற்கு இடதுபக்க காது, கழுத்து, கை, கைவிரல்கள், வலது கால், இடது கால் என பல்வேறு இடங்களில் காயமேற்பட்டுள்ளது. தற்போது பள்ளிகரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


பள்ளிகரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். 


முதற்கட்ட விசாரணையில் அதிமுகவை சேர்ந்தவர் முருகம் என்பதும் பாதிக்கப்பட்டவர் திமுகவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. உள்ளாட்சி தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் அதன் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தகவல்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்