கோவை மாநகராட்சி பொறியாளர் இல்லத்தில் வாக்காளர்களுக்கு வழங்க 5 கோடி பதுக்கல் - திமுகவினர் வீட்டை முற்றுகை

கோவை மாநகராட்சி பொறியாளர் இல்லத்தில் வாக்காளர்களுக்கு வழங்க 5 கோடி பதுக்கல் - திமுகவினர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு 4 மணி நேர காலதாமதத்திற்கு  பிறகு வந்த  அதிகாரிகள்.


 


கோவை ஆர்எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன் இல்லத்தில், வாக்காளர்களுக்கு வழங்க 5 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏராளமான திமுகவினர் மற்றும் வழக்கறிஞர்கள் அங்கு குவிந்தனர்.


இதையடுத்து, காவல்துறை மற்றும் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு அங்கு வந்தனர். மற்றும் ஆர்ஓ சம்பவ இடத்திற்கு வந்தால் மட்டும் தான் சோதனை நடத்துவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஆர்.ஓ 4 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 2 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பிறகு, வீட்டிற்குள் சென்று 2 மணி  நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். பல மணி நேர சோதனைக்குப் பின்பு மாநகராட்சி பொறியாளர் வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டனர். 


அங்கு கூடியிருந்த திமுக  தொண்டர்கள் , காவல்துறையினர் தேர்தல் பறக்கும் படையினர் காத்திருந்தது தான் வீணாகிவிட்டது என்று புலம்பியபடி சென்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்