புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருடன் மின்சார வாரிய தொமுச நிர்வாகிள் சந்திப்பு

 புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக இருந்த கவிதா ராமு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இங்கு ஆட்சியராக இருந்த பி. உமாமகேஸ்வரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக மாற்றப்பட்டார்.


இதையடுத்து, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்

இந்நிலையில்   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மதிப்புக்குரிய  ஆட்சியர்  கவிதா ராமு.  ஐ.ஏ.எஸ்  அவர்களை மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் திருப்பூா் ஈ.பி. அ.சரவணன், புதுக்கோட்டை இராமு (எ) ஜெயராமன், இராமு தீபா உள்ளிட்டோர்கள் நேரில் சந்தித்து பொன்னடை அனிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியரிடம் கொரானா நோய் தொற்று காரணமாக ஊரட‌ங்கு காலத்தில் மின்சார பணிகளை மேற்கண்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென மின்சார வாரிய தொமுச சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்