மலையம்பாளையம் காவல் நிலையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள்- காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் வழங்கினார்.!


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி  கொடுமுடி தாலுகா மலையம்பாளையம் காவல் நிலையமும், மாற்றுத் திறனாளிகள் நல முன்னேற்ற சங்கமும் இணைந்து பொருளாதாரத்தில் நலிவடைந்த மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது 

நிகழ்ச்சிக்கு மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் கலந்துகொண்டு 20 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் இளைஞர் நல முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி, பொதுச் செயலாளர் சுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட தலைவர் பரமசிவம், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் சுதாகர், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் கொரோன இரண்டாவது அலையில் நலிவடைந்த ஏழை மாற்றுத்திறனாளிகள்  குடும்பங்களுக்கு , மாற்றுத்திறனாளிகள் இளையோர் சங்கம் சார்பாக  இதுவரை 4,000 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியுள்ளார்கள்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்