சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கால பைரவாஷ்டமி விழா.!



சேலம் ஜாகிர் அம்மாபாளையம் திலுள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் காலபைரவாஷ்டமி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு கோமாதா பூஜை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து 9  மணி அளவில் காலபைரவருக்கு பால் தயிர் மஞ்சள் திரு மஞ்சள் சந்தனம் குங்குமம் இளநீர் தேன் பஞ்சாமிர்தம் கரும்புச்சாறு போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு மகா பைரவ  யாகம், ருத்ர யாகம்  வளர்க்கப்பட்டு ஒரு நாற்பத்தி சமர்ப்பிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் தங்களது கைப்பட கலச பூஜைகள் செய்தனர் அறுபத்தி நான்கு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பைரவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு வடை மாலை சூட்டி சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர் இதனை தொடர்ந்து பல்வேறு விதமான தீபாராதனை காட்டப்பட்டது பின்பு பைரவர் ரதத்தில் புறப்பாடு நடைபெற்றது இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம் செல்வி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்