நேஷனல் பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா ஆண்டு சந்திப்பு.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1991 - 1995 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குனர் முனைவர். சண்முகவேல் மற்றும் முதல்வர் முனைவர்.காளிதாச முருகவேல், முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீநிவாசகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


இந்நிகழ்விற்கு கல்லூரியில் 1991-1995 ஆண்டு பயின்று தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத் யுனைடட் கிங்டம் போன்ற வெளிநாடுகளிலும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டில்லி 

போன்ற பெருநகரங்களிலும் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் தங்களது குடுத்பத்தினருடன் நேரடியாகவும் இணையவழியிலும் கலந்து கொண்டு தங்களது கல்லூரி கால நினைவுகளையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்