வெடித்து சிதறிய ரியல்மி ஸ்மார்ட்போன்


ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடித்து சிதறிய எக்ஸ்.டி.ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை பாதிக்கப்பட்ட நபர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் இருபுறங்களிலும் முழுமையாக சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் பற்றி பதில் அளித்த ரியல்மி, 'ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரை தொடர்பு கொண்டு, அருகாமையில் உள்ள ரியல்மி சர்வீஸ் மையம் செல்ல அறிவுறுத்தி இருக்கிறோம். இந்த சம்பவத்தை விரைந்து சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்,' என தெரிவித்தது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி