திருப்பூர் மாநகராட்சி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: முன்னாள் துணை மேயர் செந்தில்குமார், 22 வயது மாணவிக்கு வாய்ப்பு

 திருப்பூர் மாநகராட்சியில், திமுக கட்சியுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 


இதில் 25 வது வார்டில் வக்கீல் பூபேஷ் போட்டியிடுகிறார். 30 வது வார்டில் ஜி.முத்துலட்சுமி, 48 வது வார்டில் விஜயலட்சுமி கோபால்சாமி, 51 வது வார்டில் கே.செந்தில்குமார், 55 வது வார்டில் தீபிகா அப்புக்குட்டி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

 இதில் 51 வது வார்டில் போட்டியிடும் கே செந்தில் குமார் ஏற்கனவே திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக இருந்தவர். 55வது வார்டில் போட்டியிடக்கூடிய தீபிகா அப்புக்குட்டி 22 வயதான சட்டக்கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

   

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்