தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி.!


தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில்  தீண்டாமையை  ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமையில் இன்று  நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் மற்றும் குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.

அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்." என்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ வாசிக்க மாநகராட்சி பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

#Charusree_t

#TutyCorp

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்