வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி மீது ரயில் மோதி உயிரிழப்பு சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் உடல் சிதைந்து உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன் அன்மையில் தேனி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நவீன் பாண்டியன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரிடம் இன்று தமிழ் அஞ்சல் நாளிதழின் தொழில் மலரை, தூத்துக்குடி மாவட்ட தமிழ் அஞ்சல் நாளிதழின் புகைப்பட சித்திக் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் இன்று உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர் காலை முதலே,போராட்டத்திற்கு ஆதரவாக, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர் களை போலீசார் கைது செய்தனர். புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் ,மழை நீர் ஓடையின் குறுக்கே,, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், மந்தை நிலத்தை ஆக்கிரமித்து. வணிக வளாகமும் கட்டுவதை கண்டித்தும், நகராட்சி பகுதி 16 வது வார்டில், சந்தை வளாகத்தில், கொட்டப்பட்டுள்ள, குப்பை மேட்டை அகற்ற, நகர மன்ற உறுப்பினரும் , பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மனு அளித்து போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், புளியம்பட்டி கோயில் புதூர் வண்டிப் பாதையை, சீரமைத்ததாக பொய் சொல்லும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சொத்து வரி,,தொழில் வரி,குப்பை வரி ஆகியவற்றை பலமடங்கு உயர்த்தியதை கண்டித்தும்,. வாரச்சந்தை தினசரி மார்க்கெட் கடைகளை தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதை கண்டிப்ப...
ஈரோடு மாவட்டம்,கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள் கோபி பொலவக்காளிபாளையம் to புதுக்கரைப்புதூர் சாலையில்,எல்லமடை - கூகலூர் கிளை வாய்க்காலில் சைபன் பாலம் அருகில் சுமார் 45 - 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் மிகவும் அழுகிய நிலையில் அடையாளம் மற்றும் பெயர் விலாசம் தெரியாத நிலையில் எடுக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோபி போலீசார் இறந்து போனவர் குறித்து விசாரித்து வருகின்றனர். பொம்ம நாயக்கன்பாளையம் டாஸ்மாக் கடை அருகில் உள்ள குட்டையில் சுமார் 30- 35 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் பிரேதம் மீட்கப்பட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் செந்தில்குமார் கடத்தூர் காவல் நிலையம் (பொறுப்பு) மற்றும் உதவி ஆய்வாளர் சத்யன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் பொம்மநாயக்கன்பாளையம் டாஸ்மார்க் கடை அருகில் உள்ள குட்டையில் இறந்து கிடந்த ஆண் பிரேதம் கோபி மேட்டுவளவு, சண்முகத்தின் மகன் கார்த்திக் (32) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு தமிழ்வாணி என்ற மனைவியும் உள்ளார். இருவருக்கும் திருமணமாக...