இப்படியுமா கொடூரமா பூனை பிடிப்பாங்க... வைரல் வீடியோக்களுடன் மருத்துவமனை மீது புகார்
தாம்பரம் தனியார் மருத்துவமனையில் பூனைகளை பிடித்து கொன்று விட்டதாக விலங்கின ஆர்வலர்கள் வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் (இந்து மிஷன்) ஏராளமான பூனைகள் சுற்றி வந்துள்ளன. இதில் சிகிச்சை நோயாளிகளை சில பூனைகள் கடித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் பூனைகளை ஊழியர்கள் மூலம் பிடித்துள்ளனர்.
அப்போது பூனைகளை கொடுமையான முறையில் பிடித்த வீடியோ மற்றும் இறந்தநிலையில் மருத்துவமனை முன்பு கிடந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வரைலானது.
இந்த நிலையில் மருத்துவமனையில் பூனைகள் பிடித்து கொல்லப்பட்டதாகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் விலங்கின ஆர்வலர்கள் வீடியோ ஆதாரத்துடன் தாம்பரம் போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பூனைகளை பிடிப்பதற்கு என்ன காரணமாக இருந்தாலும் இது போன்ற செயல்பாடுகளை அனுமதிக்கமுடியாது. பூனைகளை கொடுமைபடுத்தி கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் நோயாளிகளுக்கு தொல்லை கொடுத்த பூனைகள் பிடிக்கப்பட்டது. பூனைகள் கொல்லப்படவில்லை என தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.