சக்ராசனம், கூர்மாசனம் செய்து யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் அசத்திய மாணவர்கள்.

திருப்பூர் மாவட்ட யோகாசன அசோசியேசன் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் கிரேட்டர் ஆகியோர் இணைந்து ஓபன் யோகா சாம்பியன்ஷிப் போட்டி-2023 கல்லூரி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில்  நடைபெற்றது.


 பல்வேறு பிரிவின் கீழ் நடைபெற்றது. இந்த போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சக்ராசனம், பூமியாசனம், ஹாலாசனம், புஜ்ஜபீடாசனம், யோகநித்யா, கூர்னசரபாசனம், பத்மசிரசாசனம், பத்மபக்தாசனம் செய்து அசத்தினர், மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சிறப்பாக யோகாசனம் செய்து தேர்வாகும் மாணவர்கள் தாய்லாந்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்