அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை..!

 

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 7ஆம் தேதி வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது, அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்ட்டில் உள்ள வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதாவது, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை, மதுரை, சிவங்கங்கை,  விருதுநகர், புதுக்கோட்டை, தொன்காசி , கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மொத்தம் 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்