சத்தியமங்கலத்தில், சர்வதேச புலிகள் தின விழிப்புணர்வு பேரணி.



 ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 29-ம் ஆம் தேதி உலகளாவிய புலி தினம் அல்லது சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற் கான முயற்சிகளை மேற்கொள்வத ற்கும், இந்த நாள் அனுசரிக்கப்படு கிறது. புலிகளின் இயற்கையான வாழ்விடங்களை பாதுகாப்பதற் கான , உலகளாவிய அமைப்பை ஊக்குவிப்பதும் ,புலிகளின் பாது காப்பு பிரச்சினைகளுக்கு, பொது மக்களிடையே விழிப்புணர்வையும், ஆதரவையும் ஏற்படுத்துவதே சர்வதேச புலிகள் நாளின் குறிக் கோள் ஆகும். உலகளவில்,13 நாடு களில் புலிகள் காணப்படுகின் றன. 2010 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடை பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலி கள் உச்சி மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனு சரிக்க முடிவு செய்யப்பட்டது. அதனையொட்டி, ஒவ்வொரு ஆண் டும் ஜூலை 29ம் தேதி சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, விழிப் புணர்வு பேரணி, இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் வனக்கோட்டம், சத்தியமங்கலம் வனச்சரகத்தின் சார்பில், சத்திய மங்கலத்தில், உதவி காவல் கண் காணிப்பாளர் அய்மென் ஜமால் இ.கா.ப தலைமையில், சத்தி வனச் சரகர் பழனிச்சாமி, சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகி யோர் முன்னிலையில், விழிப்புண ர்வு பேரணி சத்தியமங்கலம் வட்டாச் சியர் அலுவலகத்தில் இருந்து புறப் பட்டு, மைசூர் நெடுஞ்சாலை, எஸ். பி.எஸ் கார்னர். கோபி சாலை வழியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது


பேரணியில், வன அலுவலர்கள், வெற்றி நர்சிங் கல்லூரி மாணவர் கள், தன்னார்வ தொண்டு நிறுவன த்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், புலிகளை காப்பதன் அவசியம் மற்றும் சர்வதேச புலிகள் தினம் குறித்த சிறப்பினை, வெற்றி நர்சிங் கல்லூரி இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் எடுத்துரைத்தனர்.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்