சென்ன சமுத்திரம் கீழ்பவானி கிளை வாய்க்காலில் வாடிய பயிர்களை காப்பாற்ற உரிய முறையில் தண்ணீர் திறந்து விட கோரி விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை

 ஈரோடு மாவட்டம் சென்ன சமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரசாம்பாளையம்  கீழ்பவானி கிளை வாய்க்கால் உள்ளது. 



இந்த கிளை வாய்க்காலில் மொத்தம்  19,500 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. கீழ் பவானி  கிளை வாய்க்காலில் பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து  ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறந்து விடப்படும். 



ஆனால் இந்த முறை  ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டு  (ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை) இன்று வரை  12 வது வயல் வரை இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை . இதனால் விவசாயிகள்  பயிர்களை காப்பாற்ற   பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.



 12 வது வயல் வரை தண்ணீர் உடனடியாக  வர வேண்டி பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம்  நேரடியாக எடுத்துக் கூறி எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் விவசாயிகளின் பயிர்கள் வாடி மிகவும் வேதனைக்கு உள்ளாகி உள்ளது. 



இதை அரசு உடனடியாக தலையிட்டு, தண்ணீர் வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொதுமக்களும், விவசாயிகளும், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாய சங்கம் நிர்வாகிகளும், மற்றும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தமிழ் அஞ்சல் செய்தியாளர்  கொடுமுடி தியாகராஜன்.

97887 23342

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்