30.01.2024 மற்றும் 31.01.2024 ஆகிய இரண்டு தினங்கள் நியாயவிலை கடைகள் செயல்படும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 10.01.2024 முதல் 14.01.2024 வரை அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மேற்படி நாட்களில் இதர பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், ஜனவரி -2024 மாதத்தில் அதிகமாக அரசு விடுமுறை நாட்கள் இருந்ததாலும், இந்த மாதத்தில் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள்  இதுவரை வாங்கமல் அதிக அளவில் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு அறிய வந்துள்ளது. எனவே, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மாதத்தில் இதுவரை பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற ஏதுவாக 30.01.2024 மற்றும் 31.01.2024 ஆகிய இரண்டு தினங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 7.00 வரை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்