மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் நியமிக்க வேண்டும்... முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் கோரிக்கை

எம்ஆர்ஐ க்கு டாக்டர், நிரந்தர அறுவை சிகிச்சை டாக்டர், மருத்துவ கல்லூரி விரைந்த அமைத்தல் குறித்து சென்னையில் சுகாதாரத்துறை இயக்குனரிடம் முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் நேரில் கோரிக்கை விடுத்தார்.

 
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக அறுவை சிகிச்சை டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும்  பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் கடந்த ஓராண்டாக முறையான சேவை இல்லாமல் ரிப்போர்ட் கொடுப்பதற்கு டாக்டர் இன்றி இருப்பதால் மக்களுக்கு பயன்படாமல் உள்ளது.
இந்த நிலையை எடுத்துரைத்து விரைந்து ஸ்கேன் டாக்டர் நியமிக்க வேண்டும் என்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்றும் விரைந்து மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைத்திட முழு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றும் கோரி, தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தியை நேரில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்த  மனுவினை அவரிடம் வழங்கினார். மிக முக்கியமான மூன்று கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற முழு முயற்சிகள் எடுப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் முன்னாள் எம்எல்ஏவிடம் உறுதி அளித்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்