Posts

Showing posts from October, 2024

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் தாகூர் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் எ.மு.ராஜன் எழுதிய 49 ஆவது நூல் வெளியீட்டு விழா

Image
 பேராசிரியர்  எ.மு.ராஜன் நூல் வெளியீட்டு விழா   தாகூர் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர்  எ. மு..ராஜன் எழுதிய 49 ஆவது நூல் வெளியீட்டு விழா புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. தாகூர் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர்  எ.மு.ராஜன் இதுவரை 40 நூல்களை எழுதி உள்ளார். அவர் எழுதிய நூல்களில் ஆறு நூல்கள் தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி அரசின் விருதுகளைப் பெற்றுள்ளன. புதுச்சேரி அரசின் கலைமாமணி, ஏர் இந்தியா நிறுவனத்தின் (BOLT) சிறந்த ஆசிரியர், இலக்கிய மாமணி, ஹைக்கூ செம்மல், உள்ளிட்ட 14 விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் ஒன்றான உலகச் சாதனையாளர் விருது நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில்  சி.பி.ஐ. இயக்குனரால் வழங்கப்பட்டது.  இதுவரை 25 நாடுகளுக்கு விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் மட்டுமல்லாது சுற்றுலாவாகவும் சென்று வந்துள்ளார்.  இவர் 40 ஆண்டு காலம் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி தாகூர் கலைக் கல்லூரியின் முதல்வராக ஓய்வு பெற்றார்.  அவர் எழுதிய 49 ஆவது நூலான "இளைஞர்கள் முன்னேற 100 வழிகள்" எனும் நூல் தமிழ் சங்க...

கோவை மாநகர மாவட்ட பசும்பொன் தேசியக் கழகத்தின் சார்பாக முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா

தேசியம் தெய்வீகமும் எனது இரு கண்கள்  என்று முழக்கமிட்ட  முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பாக கோவை மாநகர மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சங்கர் பாண்டியன் தலைமையில், மாவட்ட இளைஞரணித் தலைவர் சரவணத்தேவர் முன்னிலையில் முத்துராமலிங்க தேவர் ஐயாவிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவில் ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் மகாசாமி தேவர், நகர செயலாளர் ரமேஷ்  நகர பொறுப்பாளர்கள் முத்து விஜயன் தேவர், பரத் தேவர் கலந்து கொண்டனர்.