ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சியில், ரூபாய் 5 இலட்சம் மதிப்பில், வடிகால் கட்ட பூமி பூஜை.,

கொமாரபாளையம் ஊராட்சி, சிவியார்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில், வடிகால் வசதிகள் வேண்டி, பொது மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்,பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற, ஊராட்சி மன்ற தலைவர்,2024-25 ஆம் ஆண்டு, ஊராட்சி 15-வது நிதி குழு மான்யம் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில், நிதி ஒதுக்கீடு செய்து, வடிகால் கட்ட பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது, ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் நிகழ்ச்சிக்கு, தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மேஷ்,வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி,விக்னேஸ்வரி சுப்பிர மணியம், நிலக்கிழார் ராம்கோட்டிசிவம், வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு,ஊர் கவுண்டர் கிருஷ்ணமூர்த்தி,அதிமுக கிளைச் செயலாளர்கள் சிவக்குமார்,நடராஜ் மற்றும் பொதுமக்கள திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்