ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், தமிழக முதல்வரை கண்டித்து, பாமகவினர் ஆர்ப்பாட்டம். காவல் துறையினர் கைது நடவடிக்கை..


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர், மருத்துவர் ராமதாஸை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தில், பேருந்து நிலையம் முன்பு, பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, பாட்டாளி மக்கள் கட்சி ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கே.ராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராதாஸ் பாலு,சத்தி நகர்மன்ற 14-வது வார்டு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜான் சார்லஸ், மாவட்ட மகளீரணி செயலாளர் பார்வதி, வரதராஜ் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். 

போலீசார் அனுமதியின்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரை, சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.




Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்