நாளை மறுநாள் பிளஸ்2 தேர்வு முடிவுகள்... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வரும் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடுகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 12 ம் வகுப்பிற்கு மார்ச் 3 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத் தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் 145 பேர் என 8,21,057 மாணவர்கள் 3316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தப்பட்டன. மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு அரசு தேர்வு துறை தயாராக உள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட தகவலில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் எட்டாம் தேதி காலை 9 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்படும் என அ...