நாளை மறுநாள் பிளஸ்2 தேர்வு முடிவுகள்... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வரும் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடுகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார் 

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 12 ம் வகுப்பிற்கு மார்ச் 3 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத் தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் 145 பேர் என 8,21,057 மாணவர்கள் 3316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தப்பட்டன. மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு அரசு தேர்வு துறை தயாராக உள்ளது. 

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட தகவலில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் எட்டாம் தேதி காலை 9 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

மார்ச் 2025-ல் நடைபெற்ற 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான 12. ம் பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  8.5.2025 (வியாழக்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை

https://results.digilocker.gov.in அல்லது

www.tnresults.nic.in

தேர்வர்கள் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 


பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!