தூத்துக்குடியில் பெரியார் 147வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை.!

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதன்படி  தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள பெரியார் 147வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சுசிரவீந்திரன், மாநில திமுக பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மண்டலத் தலைவர்; வக்கீல் பாலகுருசுவாமி, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், ரமேஷ், பழனி, அருண்குமார்,  ஜேசையா, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார்,  மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், கிறிஸ்டோபர் விஜயராஜ், பரமசிவம், ஆனந்தசேகர், ரவி, சத்யா, சாகுல்ஹமீது, முருகஇசக்கி, ஜெயக்கனி, ரூபராஜா, மகேஸ்வரன்சிங், நலம்ராஜேந்திரன், செந்தில்குமார், பால்ராஜ், செய்யது காசிம், மாவட்ட பிரதிநிதி நாராயணன், தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், கருப்பசாமி, வேல்முருகன், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சுப்பையா, ரவீந்திரன், பாலகுருசாமி, சுரேஷ், டென்சிங், பொன்ராஜ், சிங்கராஜ், கருப்பசாமி, செல்வராஜ், மூக்கையா, முனியசாமி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், விஜயகுமார், இசக்கிராஜா, பட்சிராஜ், அந்தோணி பிரகாஷ்மார்ஷலின் மற்றும் நிர்வாகிகள், குமார், பிரபாகர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் மற்றும் செல்வி, துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி