காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி : நெல்லை சரக டிஐஜி முதலிடம்!

 

வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு)  சந்தோஷ் ஹடிமணி  முதலிடம் பிடித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று (15.09.2025) மற்றும் இன்று (16.09.2025) ஆகிய இரண்டு நாட்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும்போட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு  சந்தோஷ் ஹடிமணி  தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டம் மற்றும் திருநெல்வேலி நகரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9,11, மற்றும் 12வது பட்டாலியனைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்/காவல் ஆணையர் உட்பட காவல் உதவி ஆணையர், துணை ஆணையர், காவல் உதவி கண்காணிப்பாளர், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 26 காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பிஸ்டல்(Pistol) அல்லது ரிவால்வர் (Revolver) ரக துப்பாக்கி மற்றும் இன்சாஸ்(Insas) ரக துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பிஸ்டல்(Pistol) அல்லது ரிவால்வர் (Revolver) ரக துப்பாக்கி சுடும் பிரிவில் திருநெல்வேலி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  முருகன்  முதலிடத்தையும், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு  சந்தோஷ் ஹடிமணி  2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

அதே போன்று இன்சாஸ் (Insas) ரக துப்பாக்கி சுடும் பிரிவில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு  சந்தோஷ் ஹடிமணி  மற்றும் கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் உட்கோட்ட காவல் உதவ கண்காணிபபாளர் ரேகா நங்லாட் ஆகிய இருவரும் முதலிடத்தையும், திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர்  சுரேஷ் மற்றும் கன்னியாகுமாரி பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்  இளஞ்செழியன் ஆகிய இருவரும் 2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு  சந்தோஷ் ஹடிமணி  முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  முருகன்  2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு  சந்தோஷ் ஹடிமணி  பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  சுனைமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர். இந்நிகழ்வின்போது கமாண்டோ படை பிரிவின் காவல்துறை கூடுதல் கண்காணிக்காளர்  ஸ்டீபன் ஆகியோர் உடனிருந்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி