தூத்துக்குடி : பட்டாக்களை ரத்து செய்ய மாநகராட்சி திடீர் உத்தரவு - பொதுமக்கள் அதிர்ச்சி.!!
தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்து அதைச் சுற்றியுள்ள வீடுகளை அப்புறப்படுத்த ராஜாராம் என்பவர் தொடர்ந்த வழக்கில், குடியிருப்புகளுக்கு வழங்கியுள்ள பட்டாக்களை ரத்து செய்ய, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், வட்டாட்சியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.