மழை பெய்தால் நீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து நோய் பரவும் அபாயம் - தூத்துக்குடி மாநகராட்சி விஎம்எஸ் நகர் பகுதியில் சாலை அமைக்க பொது மக்கள் கோரிக்கை .
தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு தெற்கு விஎம்எஸ் நகர் மேற்கு பகுதி தெருக்களில் உள்ள மணல் சாலைகளில் ஒவ்வொரு ஆண்டு மழை பெய்யும் பொழுது மழைநீர் கழிவுநீருடன் கலந்து பல மாதங்கள் தேங்கி நோய்களை பரப்பி வருகிறது.
இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.