பெரியார் பிறந்தநாளையொட்டி அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை.!

 

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதன்படி  தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள பெரியார் 147வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணை செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட அணி நிர்வாகிகள் ராமஜெயம், வீரபாகு, ரகுராமன், ஜனகர், செல்வகுமார், சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய செயலாளர் இளையராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை ஸ்டாலின், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், ராஜசேகர், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி