தூத்துக்குடி மாநகராட்சி சாலைகளில்...கவலைக்கிடமான சாலையில் இதுவும் ஒன்று.! - மாநகராட்சி நிர்வாகம் சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை.!
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள முக்கிய பிரதான சாலைகளின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கால்வாய் சேனல் மூடி பல இடங்களில் உடைந்து போக்குவரத்துக்கு தடையாகவும், பொதுமக்களுக்கு மரண பயத்தையும் ஏற்படுத்துகிற மரண குழியாகவும் அமைந்துள்ளது.
இதன்படி பக்கிள் ஓடை 4ம் பாலத்தில் அமைந்துள்ள 5 வழிச் சாலையில், மட்டக்கடை நோக்கி செல்லும் பாதையில், குரூஸ்புரம் கால்நடை மருத்துவமனை அருகில் "பாதாள சாக்கடை கால்வாய் சேனல்" உடைந்து மாதங்கள் பல ஆகியும் இன்று வரை பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மரண பயத்தில் இந்த மரணக்குழியை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் மக்கள் பிரச்சனையை நேரில் பார்வையிட்டு நிரந்தர தீர்வு காண வழி வகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.