விஜய் பிரச்சாரத்தின் போது தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால்.. - தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை!
விஜய் பிரச்சாரத்தின் போது தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தூத்துக்குடி வரும்போது, தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி வழங்கப்படும் இடத்தில் தொண்டர்கள் முறையாக நடந்துகொள்ள வேண்டும். திருச்சி-போல் தேவையில்லாத முறையில் நடந்து கொண்டால் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம். பிரசாரம் நடத்தப்படும் இடங்களில் ஆய்வு செய்த பின் அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.