தூத்துக்குடி : செல்போன் டவரில் வேலை செய்த போது மின்சாரம் பாய்ந்து ஏர்டெல் நிறுவன ஊழியர் பலி!
தூத்துக்குடி அம்பேத்கர் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சதீஷ்குமார் (23), இவர் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்கல் இன்ஜினியர் படித்துள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில் டெக்னிக்கல் வயர்மேனாக வேலை பார்த்து வருகிறார். இன்று மாலை அலங்கார தட்டு ஆரோக்கியபுரம் பகுதியில் ஏர்டெல் டவரில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அருகில் சென்று கொண்டிருந்த மின்சார வயரில் கை பட்டதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.