கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.!
கரூர் முப்பெரும் விழாவில் திமுக துணை பொதுச் செயலர் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் கட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று வழங்கினார். 16 நிர்வாகிகளுக்கு நற்சான்றுகளுடன் பணமுடிப்பு வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.
இது குறித்து கனிமொழி எம்.பி. கூறுகையில்:- "முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் உள்ளிட்ட பல கழக முன்னோடிகளும், கொள்கைப் பற்றாளர்களும் பெற்ற நம் கழகத்தின் பெரியார் விருதினை, இன்று நம் கழக முப்பெரும் விழாவில் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் அதிகம் கொள்கை வழி பணியாற்றிட ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறேன்" என கூறியுள்ளார்