காவலருடன் கள்ள உறவு.. அதீத மோகத்தால் பறிபோன உயிர் - தலைமறைவாக உள்ள இரண்டு சிறார்கள்..!

 

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள திரேஸ் நகரை சேர்ந்தவர் தான் ராமசுப்பு. இவர் கர்நாடகாவில் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராம சுப்புவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சக்தி மகேஸ்வரி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராமசுப்பு பெங்களுருவில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் சக்தி பரமேஸ்வரிக்கும் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் ராஜேந்திரன் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த  நட்பு நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். காவலர் ராஜேந்திரனுக்கும் சக்தி மகேஸ்வரிக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு ராஜேந்திரனின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ராஜேந்திரன் மனைவி மற்றும் அவர் குடும்பத்தினர் சக்தி மகேஸ்வரி உடன் உள்ள தொடர்பை துண்டிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். மேலும் சக்தி மகேஸ்வரியிடம் காவலர் ராஜேந்திரனனின் குடும்பத்தினர் ராஜேந்திரன் உடனான உறவை கைவிட கூறியுள்ளனர் ஆனால் சக்தி மகேஸ்வரி தொடர்பை துண்டிக்க மறுத்து தொடர்ந்து பழகியுள்ளார். 

தனது தந்தை வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அறிந்து ஆத்திரமடைந்த ராஜேந்திரனின் மகன் கடந்த செப். 15ம் தேதி வீட்டில் சக்தி மகேஸ்வரி தனியாக இருக்கும் போது அங்கு சென்று சக்தி மகேஸ்வரியை கொடூரமாக வெட்டி கொன்று தப்பியுள்ளார். ராஜேந்திரனின் மகனுடைய நண்பர் ஒருவரும் இதில் சம்மந்தப்பட்டுள்ளார். மகேஸ்வரின் அலறல் சத்தம் கேட்டு மகேஸ்வரின் வீட்டிற்கு சென்ற அக்கம் பக்கத்தினர் அவர் இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாளமுத்து நகர் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சக்தி மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினார். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேந்திரனின் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறார்கள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து ராஜேந்திரனின் மகனின் மற்றொரு நண்பரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி