செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டும், மேலும் காவல் நிலைய போலீசாரிடம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், காவல் நிலைய வரவேற்பாளரிடம் புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.