கால்வாய் அடைப்பு அகற்ற அனுமதி மறுக்கும் வனத்துறையால் பாலைவனமாகும் கிராமங்கள் களக்காடு குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார்.!
நெல்லை மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் உள்ள கால்வாயில் ஏற் பட்டுள்ள அடைப்பை அதற்ற வனத்துறை அனுமதி மறுப்பதால் 5 கிராமங்கள் பாலைவனமாகி வருவதாக குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
களக்காடு புலிகள் காப்பக வனத்துறை துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது. வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், திருக்குறுங்குடி யோகேஸ்வரன் கூட்டத்தை நடத்தினர் வனவர் மதன்குமார் வரவேற்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில முன் னாள் துணை தலைவர் பெரும்படையார் பேசுகையில் 'காட்டுப் பன்றி, வன விலங்குகள் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. வன விலங்குகள் அட்டகாசத்தால் விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கும். விவசாயிகளின் உயிர்களுக்கும் பாது காப்பில்லை. இழப்பீடும் போதுமானதாக இல்லை. இந்நிலை நீடித்தால் விவசாயம் அழியும் வனத்துறை, விவசாயிகள் மோதல் அதிகரிக்கும்" என்றார்.
கந்தசாமி கூறுகையில், 'சிதம்பரபுரத்தில் காட்டுப் பன்றிகளால் 5000 வாழைகள் நாசமடைந்துள்ளது ஒரு வாழைக்கு ரூ.25 வரை செலவாகிறது. நெட்டேரியங்கால் வனப்பகுதியில் ஏட்டுதரசி என்ற இடத தில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் ஊருக்குள் வராமல் வீணாகி வருகிறது. இந்த அடைப்பை அகற்ற விவசாயிகள் அப்பகுதிக்கு செல்ல வனத்துறை அனுமதி மறுப்பதால் 5 கிராமங்கள் நீரின்றி பாலைவனமாகி வருகிறது என்றார்.
விவசாயி ஜவகர் பேசுகையில்:- 'தற்போது நெல் பயிர்கள் நிறைமாத கர்ப்பிணி போல் கதிர் வரும் நிலையில் உள்ளது. தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக பயிர்களை காப்பாற்ற வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்ற அனுமதி வழங்க வேண்டும். அதுபோல அங்குள்ள புல்லுமொட்டை இசக்கியம்மன் கோயிலில் மழை வேண்டி வழிபாடு நடத்தவும் அனுமதிவழங்க வேண்டும்" என்றார்.
இந்திய கம்யூ. முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன் பேசுகையில், 'காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை தடுக்க விளைநிலங்களை சுற்றி சோலார் வேலி அமைக்க முழு மானியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். வடகரையில் மட்டும் விளைநிலங்களை திருத்த ஜே.சி.பி இயந்திரம் கொண்டு செல்ல தடை விதித்து போரடு வைக்கப்பட்டுள்ளது ஏன்? என்று கேள்வி விடுத்தார்.
சில்கிஸ் சாமுவேல் பேசும்போது, 'நான் விளைநிலங்களை திருத்த ஜேசிபி இயந்திரம் கொண்டு செல்ல 1 வருடமாக அனுமதிகேட்டு மனுக்கள் கொடுத்தும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த சட்டம் அரசு கொண்டு வந்ததா? அல்லது வனத் துறை கொண்டு வந்ததா? என்றார்
விவசாயிகள் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படுமென வனத்துறை அதிகாரிகள் பதில் தெரிவித்தனர். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.