Posts

Showing posts with the label சினிமா

சத்தமில்லாமல் தயார் ஆகும் பிக் பாஸ் - 4... உற்சாகத்தில் ரசிகர்கள்

Image
வருடத்தில் பாதியை கடந்துவிட்டோம். டிவி நிகழ்ச்சிகளில் பலரின் கவனங்களை ஈர்த்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மீதான பார்வையும், எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொங்கியுள்ளது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருவதால் சின்னத்திரைக்கான படப்பிடிப்புகள் நடத்துவதில் சிரமமான சூழ்நிலையே நிலவுகிறது. பிக்பாஸ் சீசன் 4 க்கான நேரமும் வந்துவிட்டது. இவ்வருடம் நிகழ்ச்சி நடைபெறுமா என்ற சந்தேகமான கேள்வியே ரசிகர்கள் மனதில் இருக்கிறது. தமிழ் பிக்பாஸ் போல தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 4 ஐ இவ்வாண்டு ஒளிப்பரப்பாகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் கடந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் நாகார்ஜூனா கொரோனா முடியும் வரை படம் அல்லது டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என கூறிவிட்டாராம். இந்நிலையில் நிகழ்ச்சி உருவாக்கக்குழு போட்டியாளார்களை Zoom ஆப் மூலம் மீட்டிங் நடத்தி, வீடியோ மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாம். கொரோனா குறைந்த பின் நிகழ்ச்சியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளனர். மேலும் 6 அல்லது 7 வாரங்களில் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் கொரோனா நீடித்தால...

கன்னடத்தில் ரீமேக்காகும் அசுரன்

Image
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது. அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணி நடிக்கிறார்.  இந்நிலையில், அசுரன் படத்தை கன்னடத்திலும் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் வேடத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்க உள்ளார். இப்படத்தை ஜேக்கப் வர்கீஸ் இயக்க உள்ளார்.

நடிகர் விஜய் வீட்டில் ஒன்றுமே இல்லை - வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

Image
நடிகர் விஜயிடம் விசாரணை முடிந்தது ரொக்கமும் வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல்.   வீடியோவை காண  பிகில் படத்தில் நடித்ததற்கு வாங்கப்பட்ட சம்பளம் தொடர்பாக நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 30 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தளபதி 64 மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் நடிகர் விஜய் வில்லன்களுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சி படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது திடீரென படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகரிடம் விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கேரவனில் விசாரணை மேற்கொள்ளப் பட்டது தொடர்ந்து மேலும்  தகவல்கள் தேவைப்பட்டதாலும் தனியாக நடிகர் விஜய் விசாரிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததாலும் நடிகர் விஜய்யை அங்கிருந்து அழைத்துச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் பனையூரில் உள்ள பங்களாவில் நடிகர் விஜயிடம் விசாரணை மேற்கொண்டனர் 30 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த விசாரணையில் நடிகர் விஜய் சிறப்பான ஒத்துழைப்பை அளித்ததாகவும் அவரிடமிருந...

யோகிபாபுவின் திடீர் திருமணம், மஞ்சு பார்கவியை கரம் பிடித்தார்

Image
மஞ்சு பார்கவியை கரம் பிடித்த யோகி பாபு. குலதெய்வ கோயிலில் திடீர் திருமணம். மணமகள் மஞ்சு பார்கவியுடன் காமெடி நடிகர் யோகிபாபு திருமணம் திருத்தனி அருகேயுள்ள  அவரது குல தெய்வ கோயிலில் இன்று காலை திடீரென நடந்தது. தற்போதைய நிலையில் பிசி நடிகராக இருப்பவர் யோகிபாபு. அவர் நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் துணை நடிகை ஒருவருடன் யோகி பாபு இருக்கும் போட்டோ வைரலானது. ஆனால் போட்டோவில் இருக்கும் பெண்ணுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஒரு துணை நடிகை. அவர், ஒரு படத்தின் ஷூட்டிங்கில் யோகி பாபுவுடன் அந்த செல்பியை எடுத்ததாகத் தெரிவித்ததால் பிரச்னை முடிந்தது. இந்நிலையில் யோகிபாபுவுக்கு இன்று (05/02/2020) காலை திடீரென திருமணம் நடை பெற்றுள்ளது. மணமகள் பெயர் மஞ்சு பார்கவி. யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெறவுள்ளது. திருமணம் குறித்து வெளிப்படையாக அறிவிப்பேன் என மேடைகள...

168 படத்தில் வெயிட்டான கதாபாத்தித்தில் சித்தார்த்

Image
தர்பார் படத்தை அடுத்து ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பது அனைவருக்கும் தெரியும். ரஜினியின் தங்கையாக கீர்த்தி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தலைவர் 168 படத்தில் நடிக்க சித்தார்த்தை அணுகியுள்ளாராம் சிவா. படத்தில் சித்தார்த்துக்கு வெயிட்டான கதாபாத்திரமாம். அவர் தான் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாம். சித்தார்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டாரா என்பது இன்னும் தெரியவில்லை. சித்தார்த் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்காக அவர் பல்காக டேட்ஸ் கொடுத்திருக்கிறார். இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் துவங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு விஷயத்தால் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியன் 2 படத்திற்கு மொத்தமாக டேட்ஸ் கொடுத்துள்ளதால் சித்தார்த் ரஜினி படத்திற்கு டேட்ஸ் கொடுக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதை அவர் தான் உறுதி செய்ய வேண்டும். சித்தார்த் ட்விட்டரில் படு ஆக்டிவ...

மனஅழுத்தத்தில் இருந்து விடுபட சிக்ஸ் பேக் வைத்தேன்-விஷ்ணு விஷால்

Image
நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை பிரிந்ததாலும், கெரியர் பாதிக்கப் பட்டதாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிவித்தார்.  அதில் இருந்து மீண்டு வந்து சிக்ஸ் பேக் வைத்த விஷயத்தை அண்மையில் அவர் ஒரு கடிதம் மூலம் ட்விட்டரில் தெரிவித்தார். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாகியுள்ளார். 27 வயது வரை மதுவை தொடாத நான் படங்களில் நடிக்கத் துவங்கிய பிறகு கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தேன். மன அழுத்தம் ஏற்பட்ட பிறகு மதுவுக்கு அடிமையானேன். ஒரு கட்டத்தில் நான் செய்வது எனக்கே பிடிக்காமல் போனது. அதன் பிறகே மதுப்பழக்கத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்தேன் என்கிறார் விஷ்ணு விஷால். என் வாழ்க்கையில் இதுவரை செய்யாத விஷயம் சிக்ஸ் பேக். அதை செய்ய விரும்பினேன். என் ட்ரெய்னரிடம் கூற அவரும் உதவி செய்தார் என்கிறார் விஷ்ணு விஷால். அவர் பற்றி ட்ரெய்னர் கூறியதாவது, விஷ்ணு இங்கு வந்த போது அவரால் தொடர்ந்து ஒர்க்அவுட் செய்ய முடியாது. ஸ்ட்ரெஸ் அதிகமாகிவிட்டால் அதிகம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் விஷ்ணு. அதை எல்லாம் தாண்டி மன உறுதியுடன் செய்லபட்டு சிக்ஸ் பேக் ...

நான் சிறு பிள்ளையாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் - ராகுல் ராமகிருஷ்ணன்

Image
விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன்ரெட்டி  படத்தில் அவரின் நெருங்கிய நண்பர் சிவாவாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணன். சைன்மா என்கிற குறும்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் அனைவருன் கவனத்தையும் ஈர்த்தார். 29 வயதாகும் அவர் ட்விட்டரில் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நான் சிறு பிள்ளையாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். என் துக்கம் பற்றி இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனைத்தும் காயப்படுத்துகிறது. நீதியே இல்லை. தற்காலிக ஆறுதல் தான். நல்லபடியாக நடந்து கொள்ளுமாறு ஆண்களுக்கு கற்றுக் கொடுங்கள். தைரியமாக இருங்கள். நல்லபடியாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். தன்னை யார் பலாத்காரம் செய்தது என்ற விபரத்தை ராகுல் தெரிவிக்கவில்லை. அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் காமெடி செய்து எங்களை சிரிக்கை வைக்கும் உங்களுக்குள் இப்படி ஒரு சோகமா என்று தெரிவித்துள்ளனர். தனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ராகுல், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். நடிக்க வரும் முன்பு ராகுல் ராமகிருஷ்ணா பத்திரிகையாளராக இருந்தார். பாடல்கள் எ...

கோடீஸ்வரி கௌசல்யா ஒரே நாளில் முதல்வர் மற்றும் கமல்ஹாசனை சந்தித்தார்

Image
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த கௌசல்யா கார்த்திகா கலந்து கொண்டார். காது கேளாத, வாய் பேச முடியாத அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராதிகா சரத்குமாரின் வாய் அசைவை வைத்து பதில் அளித்தார். ராதிகா கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து கௌசல்யா ரூ. 1 கோடி வென்றார். இதையடுத்து அவர் தன் ஆசை ஒன்றை ராதிகாவிடம் கூற அவரும் நிறைவேற்றி வைத்துள்ளார். உலக நாயகன் கமல் ஹாஸனை சந்தித்து ஆசி பெற விரும்புவதாக கௌசல்யா ராதிகாவிடம் தெரிவித்தார். இதையடுத்து ராதிகா கௌசல்யா மற்றும் அவரின் குடும்பத்தாரை கமல் ஹாஸனை சந்திக்க வைத்தார். கமல் கௌசல்யாவை வாழ்த்தினார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் நம்பிக்கையுடன் பிற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் கௌசல்யாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்தியுள்ளார். முதல்வர் வாழ்த்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதை பார்த்த நெட்டிசன்கள் நீங்க நல்லா இருக்கணும் கௌசி என்று வாழ்த்தியுள்ளனர். கோடீஸ்வரி போன்ற கேம...

அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற மலையாள படத்தில் அர்ஜுன்

Image
  16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக  போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது.  இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர்.   ரூ.100 கோடி செலவில் தயாராகிறது. பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட இருப்பதாக கூறப்படுகிறது.   இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அர்ஜுனின் தோற்றம் அடங்கிய புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜுன், அனந்தன் எனும் போர்வீரன் கத...

ஹாலிவுட் படம் இயக்கும் ஆஸ்கர் நடிகர்

Image
8 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்தவிட முடியாது. அந்த படத்தில் ஹீரோவாக நடித்த தேவ் படேல், தொடர்ந்து  பல ஹாலிவுட் படங்களில் நாயகனாக அசத்தியுள்ளார். அந்தோனி மராஸ் இயக்கத்தில் தேவ் படேல் நடிப்பில் வெளியான ஹோட்டல் மும்பை படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. நாயகனாக அசத்தி வந்த தேவ் படேல் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். 2008ம் ஆண்டு வெளியான ஸ்லம் டாக் மில்லியனர் படம் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்தது. கிட்டத்தட்ட 12 வருஷங்கள் ஆனாலும், அந்த படத்தின் நாயகன் தேவ் பட்டேலை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. ஹீரோவாக கலக்கி வந்த தேவ் படேல் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளார். பல ஹாலிவுட் படங்களில் நடித்து இயக்குநராகும் அனுபவத்தை பெற்றுள்ள தேவ் படேல், தற்போது மங்கி மேன் எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். மங்கி மேன் படம் சாதாரண படமாக இல்லாமல், மாயாஜாலங்கள் நிறைந்த படமாக உருவாகவுள்ளது. ஜெயிலில் இருந்து வெளியேறும் கைதி ஒருவனுக்கு தீய சக்திகள் கொடுக்கும் தொல்லைகளும் அதில் இருந்...

நாரப்பா வாக உருவெடுக்கும் அசுரன்

Image
வெற்றி மாறன் தனுஷ் இணைந்து பல படங்களில் வேலை செய்து உள்ளனர். வட சென்னை படத்திற்கு பிறகு வெற்றி மாறன் எந்த படத்தை யாரை வைத்து எடுக்க போகிறார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் எழுந்தது. வட சென்னை படத்தை முடித்து விட்டு தனுஷ் பல படங்களில் நடிக்க சென்றுவிட்டார். வெற்றி மாறன் தனது அடுத்த கதையை உருவாக்கி கொண்டு இருந்தார். இதன் பின் சில மாதங்கள் கழித்து செய்தி வந்தது தனுஷ் வெற்றி மாறன் உடன் இணைவதாகவும் அதனை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்றும் வெக்கை என்ற நாவலை தழுவி இப்படத்தை எடுத்தார் வெற்றி மாறன். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்படம் வெற்றிகரமாக நூறாவது நாளை எட்டியது. இப்படத்திற்கு பல மேடைகளில் பல விருதுகள் கிடைத்தன. ஒரு படம் ஒரு மொழியில் ஹிட் ஆனால் அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அசுரன் தெலுங்கில் ரீமேக் அவதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர் வெங்கடேஷ் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனராக ஸ்ரீகாந்த் பணியாற்ற...

52 வயதில் ஐந்தாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை

Image
உலகப்புகழ் நடிகை பமீலா அன்டர்சன் இவர் 2010ல் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்.பெரும்பாலும் நடிகைகள் விவாகரத்து மற்றும் மறுமணம் செய்வது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம்  அல்ல. ஆனால் உலகப்புகழ் நடிகை பமீலா அன்டர்சன் தற்போது 52 வயதில் ஐந்தாவது திருமணம் செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. Jon Peters என்ற தயாரிப்பாளரை பமீலா திருமணம் செய்து கொண்டுள்ளார். 75 வயதாகும் ஜானுக்கும் இது ஐந்தாவது திருமணம். இவர்கள் இருவரும் கடந்த திங்கட்கிழமை திருமணம்  கலிஃபோர்னியாவில் திருமணம் செய்து கொண்டுக்ள்ளனர்.