ஹாலிவுட் படம் இயக்கும் ஆஸ்கர் நடிகர்


8 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்தவிட முடியாது. அந்த படத்தில் ஹீரோவாக நடித்த தேவ் படேல், தொடர்ந்து  பல ஹாலிவுட் படங்களில் நாயகனாக அசத்தியுள்ளார். அந்தோனி மராஸ் இயக்கத்தில் தேவ் படேல் நடிப்பில் வெளியான ஹோட்டல் மும்பை படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. நாயகனாக அசத்தி வந்த தேவ் படேல் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.




2008ம் ஆண்டு வெளியான ஸ்லம் டாக் மில்லியனர் படம் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்தது. கிட்டத்தட்ட 12 வருஷங்கள் ஆனாலும், அந்த படத்தின் நாயகன் தேவ் பட்டேலை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. ஹீரோவாக கலக்கி வந்த தேவ் படேல் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளார். பல ஹாலிவுட் படங்களில் நடித்து இயக்குநராகும் அனுபவத்தை பெற்றுள்ள தேவ் படேல், தற்போது மங்கி மேன் எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். மங்கி மேன் படம் சாதாரண படமாக இல்லாமல், மாயாஜாலங்கள் நிறைந்த படமாக உருவாகவுள்ளது.




ஜெயிலில் இருந்து வெளியேறும் கைதி ஒருவனுக்கு தீய சக்திகள் கொடுக்கும் தொல்லைகளும் அதில் இருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பதும் தான் மங்கி மேன் படத்தின் கதைக் களம். தேவ் படேல் இந்த கதையை ஹாலிவுட் திரைக் கதையாசிரியர்களான பால் ஆங்குனவெலா மற்றும் ஜான் கொலீயிடம் இணைந்து எழுதியுள்ளார். அர்மாண்டோ லன்னூசி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘The Personal History of David Copperfield' எனும் படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. தேவ் படேல் இந்த படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். இந்தியாவில் இந்த படம் வரும் மே மாதம் 8ம் தேதி திரைக்கு வருகிறது.



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!