Posts

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 வது நாளாக போராட்டம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 வது நாளாக தொடர்ந்து மருத்துவர்கள், மேற்கு வங்க மாநிலத்திற்கு எதிராக போராட்டம். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் மருத்துவமனை பயிற்சி மையங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்மந்தமாக இந்தியா முழுவதும் இந்த பிரச்சினைக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்று தொடர்ந்து 3 வது நாளாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை,மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனைக்கு பெரும் பாலும், நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் முதல் உள்நோயாளிகள் வரை தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர் . ஆனால் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 700க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் இல்லாமல் வெறிச்சோடிக்காணப்பட்டது. ஆனால் மருத்துவர் ஆர்த்தி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்...

கோவை கல்லூரி மாணவி பரிதாப மரணம்

Image
  ======================= கோவை மாவட்டம்  கோவை புதூர் நேதாஜி நகரை சேர்ந்த கணேசன் மல்லிகா தம்பதியினர்  மகள் சத்யப்பிரியா (20) கோவை அரசு கலைக்கல்லூரியில்  மூன்றாம் ஆண்டு  பொலிடிக்கல் சயன்ஸ்  படித்து  வருகிறார்.  மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.  இந்நிலையில் உறவினர் ஒருவரின் அறிவுறுத்தலின்  பேரில்... செல்வபுரம் மனோன்மணி சித்த வைத்திய சாலையில்  சித்த மருத்துவர் குருநாதனிடம் கடந்த(2019) சனவரி மாதம் முதல் ஏப்ரல்  வரையில் சிகிச்சை பெற்று வந்த சத்யப்பிரியாவுக்கு  சித்த மருத்துவர் குருநாதன் தந்த மருந்துகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் கடந்த ஏப்ரல் 22ந்தேதி  கோவை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.மே 1ந்தேதி சித்த வைத்தியர்  குருநாதன் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு... ஒரு மாதம் ஆகியும் ஒரு  நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மே31 ந்தேதி கோவை காவல் ஆணையரிடம்  புகார் அளிக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று  அதிகாலை 2 மணிக்கு சிசிச்சை பலனின்றி...

சுரண்டை அருகே மானூர் கால்வாய் சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு

Image
  சுரண்டை, ஜூன். 17 வீரகேரளம்புதூர் அருகே மானூர் கால்வாய் அகலப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஷில்பா சதீஷ் பிரபாகர் பார்வையிட்டார். மானூர் பகுதி குளங்களுக்கு செல்லும் சுமார் 32 கிலோமீட்டர் நீளமுடைய மானூர் கால்வாய் வீரகேரளம்புதூர் அருகே சிற்றாற்றில் இருந்து பிரிந்து செல்கிறது. இக்கால்வாய் செல்லும் வழியில் 20 குளங்கள் உள்ளன.மழைக்காலங்களில் கால்வாயின் வழியே செல்லும் வழியில் உள்ள 20 குளங்கள் நிறைந்த பின்னர் மானூர் பெரிய குளத்தை தண்ணீர் வந்து அடைகிறது. ஆனால் இக்கால்வாய் செல்லும் வழி நெடுகிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாலும், பல காலங்களாக இக்கால்வாய் தூர்வாரப்படாமல்  இருப்பதாலும், கால்வாயின் வழியே செல்லும் நீர் ஓட்டம் தடைபட்டு  மானூர் பெரிய குளத்திற்கு நீர் செல்வது தடை படுகிறது. இதனால் மானூர் பெரியகுளம் விவசாயிகள் பெரிதும் துன்பம் அடைந்து வரும் நிலையில், மானூர் பெரியகுளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கலெக்டர் ஷில்பாவை நேரில் சந்தித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். வீரகேரளம்புதூர் முதல் மானூர் வரையிலான கால்வாய் முழுவதையும் அகலப்படுத்தும்  பட்சத்தில் தங்களுடைய பிரச்ச...

கொல்கத்தாவில் டாக்டர்கள் மீது தாக்கு; சுரண்டையில் மருத்துவமனைகள் அடைப்பு

Image
  சுரண்டை சமீபத்தில் கொல்கத்தாவில் டாக்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது. இதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அகில இந்திய டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று 17 ம்தேதி காலை முதல் நாளை 18ம்தேதி காலை வரை 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் படி குற்றாலம் கிளை இந்திய மருத்துவ சங்கத்திற்குட்பட்ட நெல்லை மாவட்டத்தின் மருத்துவ நகரமான சுரண்டையில் அனைத்து மருத்துவமனைகளும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தவும். மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம் செய்து கண்டனத்தை தெரிவித்தன. இருப்பினும் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் விபத்து, அவசர சிகிச்சைகள் வழக்கம் போல செயல்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.   போட்டோ கொல்கத்தாவில் டாக்டர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தவும் கோரி சுரண்டையில் மருத்துவமனைகள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்

அப்பலோவின் ‘என்டுமேக்ஸ்’ டயர் அறிமுகம்; பிக் அப் வாகனங்களுக்கு பொருத்தமானது

Image
  கோயம்புத்துார், ஜூன் 16, 2019: வேகமாக வளர்ச்சி பெற்று வரும் பிக்–அப் டிரக்குகளின் வளர்ச்சியால் ஏற்படும் டயர் தேவைகளுக்காக அப்பலோ டயர் நிறுவனம், 'என்டோ மேக்ஸ்' என்ற டயரை அறிமுகம் செய்துள்ளது. இதன் தேவை இந்தியாவில் ஒரு மாதத்திற்கு 1,12,000 டயர்களாக உள்ளது. பிற வாகன வகைகளைக் காட்டிலும் மிக வேகமான வளர்ச்சியை பிக்அப் டிரக் பெற்று வருகிறது.  அப்பலோ டயர் நிறுவனத்தின் சென்னையில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில்  மலைப்பகுதி உட்பட அனைத்து சாலைகளிலும் செல்லும் வகையில் என்டுமேக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. வதோராவில் உள்ள அப்பலோ டயர் தொழிற்சாலையில், மாதம் ஒன்றுக்கு 80000 டயர்கள் தயாரிக்கும் கொள்ளளவை கொண்டுள்ளது. அப்பலோ என்டோமேக்ஸ் எல்டி டயர்கள், மஹிந்திரா பொலிரோ, மேக்ஸி டிரக், அசோக்லேலாண்ட் டோஸ்ட் மற்றும் டோஸ்ட் பிளஸ், டாடா ஜெனான், யோாதா போன்ற வாகனங்களுக்கு பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகனங்கள் தேவை ஆண்டுக்கு 20% வளர்ச்சியை கொண்டுள்ளது. சிக்கனமான பொருளாதார ரீதியாகவும், இணைப்பு சாலைகள் மேம்பாடு, கிராமப்புற தேவை அதிகரிப்பு ...

குடியாத்தம்.அடுத்த.கே,வி,குப்பம்.ஒன்றியத்தில்.மின்கசிவால்.தீ

Image
கே.வி.குப்பம்.சட்டமன்ற.தொகுதி க்குட்பட்ட.குடியாத்தம்.தாலுக் கா.கே.வி.குப்பம்.ஒன்றிய.வேப்பூா் .ஊரட்ச்சியில்.RS.நகா்.பகுதியி ல்.உள்ள.மலையடிவாரம்.பெரியான் பட்டரை.பகுதியில்.ஜீன்.16.அன்று .மலை.4.00அளவில்.மின்கசிவால்.தீ .விபத்து.ஏற்பட்டு.மும்தாஜ். சபரீன்.தாசீல்.நூா்ஜன்.ஆகீயோரி ன்.குடிசைவிடுகள்.முற்றிலும். ஏரிந்து.நாசமாயின.இந்த.தீ.விபத் தில்.குடிசைவிடுகளில்.TV.க்கள். தட்டுமுட்டு.சாமான்கள்.துணிமனி கள்.முற்றிலும்.ஏரிந்து.நாசமாயி ன.மேலும்.6.மேற்பட்ட.ஆடுகள்.தீ யில்.கருகி.இறந்தன.இந்த.தகவல். அறிந்ததும்.கே.வி.குப்பம்.சட் டமன்ற.உறுப்பினா்.திரு.G.லோகநா தன்.MLA.அவாகள்.விரைந்து.செண்று .பாதிக்கப்பட்டவா்களுக்கு.ஆறு தல்.கூறினா்.தொடந்து.அவாகளுக்கு .தமிழக.அரசின்.பசுமைவிடுகள்.கட் டித்தருவதாக.உறுதி.அளித்தா்.மே லும்.கே.வி.குப்பம்.சட்டமன்ற. உறுப்பினா்.திரு.G.லோகநாதன். MLA.அவாகள்.தனது.சொந்த.பணத்திலி ருந்து.பாதிக்கப்பட்ட.பொது.மக் களுக்கு.தலா.5.ஆயிரம்.விதம்.20. ஆயிரம்வழங்கினா்.தொடர்ந்து.வாரு வாய்.துறை.சார்பில்.பாதிக்கப் பட்ட.பொது.மக்களுக்கு.வேஷ்டி.சே லை.அரிசி.உள்ளிட்ட.பொருட்கள். வழங்கினா்கள்

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக ஆர்.குமார் பதவியேற்பு

Image
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக ஆர்.குமார் பதவியேற்றுள்ளார்.  திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி ஏற்றுள்ள ஆர்.குமார் ஏற்கனவே திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஆர்.டி. ஓ., வின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர். பணிமூப்பு அடிப்படையில், திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக பதவியேற்றார். அவருக்கு திருப்பூர் மாநகரை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.